மருதம் பட்டையின் பலன்கள் இதோ:

 
Published : Oct 25, 2016, 04:59 AM ISTUpdated : Sep 19, 2018, 12:39 AM IST
மருதம் பட்டையின் பலன்கள் இதோ:

சுருக்கம்

1. இதய நோய் குணமாக!

இதய இரத்த குழாய்களில் உண்டாகும் அடைப்பு, இதய பலவீனம்,இதய வலி போன்ற அனைத்து இதயம் சார்ந்த நோய்களுக்கும் மருதம் பட்டை நிரந்தர தீர்வளிக்கும் மருந்து.

மருதம் பட்டை, வெண் தாமரைப் பூ 100 கிராம், ஏலம், இலவங்கம் மற்றும் திரிகடுகம் 10 கிராம் அளவில் கலந்து, பொடியாகி வைத்துகொண்டு, காலை மற்றும் மாலை வேளைகளில், 6 கிராம் அளவு பொடியை கொதிக்க வைத்து கஷாயமாக அருந்தி வர, இதய நோய், விரைவில் குணமடையும்.

2. மன உளைச்சல் தீர!

இன்றைய விஞ்ஞான வளர்ச்சிக்கு நாம் கொடுத்த விலை மிக அதிகம், அதிலொன்றுதான், இன்று இளைஞர் முதல் முதியவர் வரை அனைவரையும், அவரவர் வாழ்வியல் சூழ்நிலைகளால் வதைக்கும்

மன உளைச்சல்.

மன உளைச்சல் கூடவே வரும், படபடப்பு, வீண் பயம்,கோபம் மற்றும் தூக்கமின்மை. இத்தகைய கொடும் நோயிலிருந்து முற்றிலும் விடுபட மருதம் பட்டை சூரணம் ஒரு அரு மருந்து.

மருதம் பட்டை, வில்வம் துளசி சம அளவில் எடுத்து சூரணம் செய்து, காலை மாலை இரு வேலை சாப்பிட்டு வர, மன உளைச்சல், தானேவிலகும்.

3. இரத்த அழுத்தம் அல்லது இரத்த கொதிப்பு நோய் தீர!

மன அழுத்தத்தின் தொடர்ச்சி தான் இரத்த அழுத்தம் [உயர் அல்லது குறை] இந்த நோயை உடலிருந்து அகற்ற அரு மருந்து இதோ!

மருதம் பட்டை, இதன் அளவில் பாதி சீரகம் சோம்பு, மஞ்சள் சேர்த்து பொடியாக்கி, காலை மாலை 6 கிராம் அளவு எடுத்து, 400 மில்லி தண்ணீரில் கலந்து கொதிக்க வைத்து, தண்ணீர் அளவு 200 மில்லி ஆனதும், பருகி வர, இரத்த அழுத்த நோய், உடலை விட்டு அகலும்.

4. சர்க்கரை நோய் அகல!

இன்று, பல விதமாக, பல வகை காரணிகளால், மக்களை மிக அதிகம் வாட்டும் ஒரு உடல் நலக்கோளாறு, இந்த சர்க்கரை நோய் பாதிப்பிலிருந்து, மக்களை மீட்கும் அரிய மருந்து, மருதம் பட்டை கஷாயம்.

மருதம் பட்டை, ஆவாரம் பட்டை சம அளவு எடுத்து, அதில் பத்தில் ஒரு பங்கு ஏலம், சுக்கு சேர்த்து, சூரனமாக்கி, காலை மாலை இரு வேலை, காய்ச்சி, காபி, டீ க்கு பதில் அருந்தி வர, சர்க்கரை நோய் தீரும்.

5. பெண்கள் மாத விலக்கு பிரச்னைகள் தீர!

மருதம் இலைகளை காய வைத்து சூரணமாக்கி, தினமும் இருவேளை சாப்பிட்டு வர, பெண்களின் மாதவிலக்கு சுழற்சி முறை, சீரடையும்.

மேலும், மாத விலக்கின் போது ஏற்படும் வயிற்று வலி முற்றிலும் தீர, சம அளவு மருதம் பட்டை, வேப்பம் பட்டையுடன் பத்தில் ஒரு பங்கு பெருங்காயம் சேர்த்து, காலை மாலை 200 மில்லி மோருடன் கலந்து பருகி வர, மாத விளக்கு வயிற்று வலி தீரும்.

 

PREV
click me!

Recommended Stories

Garlic with Jaggery : பூண்டு + வெல்லம்.. வெறும் வயிற்றில் சாப்பிட்டால் 'உடலில்' இந்த அதிசயங்கள் நடக்கும்!
Lip Balm : லிப் பாம் போடுறவங்க கண்டிப்பா 'இந்த' விஷயத்தை கவனிக்கனும்! அடுத்த முறை 'அந்த' தப்பை பண்ணாதீங்க