படாத பாடு படுத்தும் சர்க்கரை நோயை கட்டுப்பாட்டில் வைக்க இதோ சில டிப்ஸ்…

First Published Aug 15, 2017, 1:27 PM IST
Highlights
Here are some tips to control the diabeties


சக்கரை வியாதி என்பது ஒரு கொடிய நோய் அல்ல. வாயைக் கட்டினால் எல்லா நோயும் ஒரு அடி எட்டி நின்று வேடிக்கைப் பார்க்கும்.

சக்கரை நோய் எப்படி வருகிறது?

சாதரணமாக இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு மன அழுத்தம் கூடும் போது சத்தமில்லாமல் இந்த நோய் இவர்களுக்கு இலவச இணைப்பாய் ஒட்டிக் கொள்கிறது.

இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு டாக்டர்கள் பரிந்துரைக்கும் பிரிஸ்கிரிப்ஷன்களை தவறாது பயன்படுத்தி, சாதாரண நடையோ – வேக நடையோ நடந்து உடலை கண்ட்ரோலில் வைத்துக் கொண்டாலே போதுமானது.

அதை விடுத்து இரத்த அழுத்தம் வந்து விட்டதே என்று கவலைப்பட்டு, இன்னும் பல கவலைகளை இழுத்துப் போட்டுக் கொண்டால் சர்வசாதரணமாக சுகர் நோய் அளவைக் கடந்து விடும்.

ஆகவே எந்த கவலைகளும் இல்லாமல் மன சந்தோஷ மாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்தாலே பாதி நோயை நம்மை அண்ட விடாமல், மற்றவை உண்ணும் உணவிலும், வாழும் பழக்க வழக்கங்களிலும் மனிதர்கள் திருப்திகரமாக வாழ்ந்து விடலாம்.

சுகாதாரமாக வாழ்வதற்கு சுற்று புற சூழ்நிலையும் காரணிகளாக அமைகின்றன. ஒன்றுமே புரியாமல் இரத்த அழுத்தம் உள்ள மனிதர்கள் உண்டு தின்று வாழும் போது, திடுதிப்பென்று சுகர் 240 – 350 வந்துவிட நிலைகுலைந்து போகிறார்கள். அதை சாப்பிட வேண்டாம் இதை சாப்பிட வேண்டாம் சொல்லும் போது மேலும் வெறுத்துப் போகிறார்கள்.

அதனால் நாம் எப்போதுமே வருடத்துக்கு ஒரு முறை மெடிக்கல் செக் அப் செய்து வருவது தான் பாதுகாப்பான விஷயம். வெளிநாடுகளில் பெரும்பாலான கம்பெனி களில் மெடி-இன்சூரன்ஸ் இருப்பதால் மூன்று மாததிற் கொருமுறை ஃபுல் செக்அப் செய்து கொள்ள சொல்லி (இது உங்கள் காசல்லவே இன்சூரன்ஸ் தானே தருகிறது என்று) டாக்டர்களே வற்புறுத்து கிறார்கள். அதுவும் நல்லதுக்கு தானென்று நினைத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.

சக்கரையை உடனடியாய் கண்ட்ரோலுக்கு கொண்டுவர நாம் அன்றாடம் காய்கறிகளில் சேர்த்துக் கொள்ள பயன்படுத்தும் வெண்டைக்காய் மிகப் பெறும் பங்கு வகிக்கிறது / பயனைத் தருகிறது.

இந்த நோய் இருப்பவர்கள் கொஞ்சம் வெண்டைக் காயை வாங்கி ஸ்டாக் வைத்துக் கொள்வது நல்லது. தினம் இரண்டே இரண்டு வெண்டை காயை தலையையும் வாலையும் வெட்டி விட்டு, இரவில் படுக்கப் போகுமுன், படத்தில் உள்ளது போல் ஸ்லைஸ் ஸ்லைசாக வெட்டி விதைகளை நீக்கிவிட்டு ஒரு கிளாஸ் தண்ணீரில் ஊற போட்டு வைத்து மூடிவிடவும்.

காலையில் எழுந்தவுடன் ஸ்லைஸ் வெண்டைக்காய் களையும், விதைகள் உதிர்ந்து கிடந்தால் அவைகளை யும் ஒரு ஸ்பூனால் எடுத்துப் போட்டு விட்டு, அந்த தண்ணீரை மட்டும் பல் விளக்கிய பிறகு வெறும் வயிற்றில் அப்படியே குடித்து விடவும். இது போல் தொடர்ந்து செய்து வர சுகர் அளவு சட்டென்று குறைந்து, கண்ட்ரோலில் இருக்கும்.

click me!