பரீட்சை நேரத்தில் ஊட்டச்சத்து மிக்க உணவுகள் அவசியம்…

First Published Oct 8, 2016, 6:14 AM IST
Highlights


குழந்தைகளின் வாழ்வில், உண்ணும் உணவும்கூட, உணர்வுடன் சம்பந்தப்பட்டதாகத்தான் இருக்கிறது. குழந்தைகளின் பழக்கவழக்கங்கள், எரிச்சல், கோபம், முரட்டுத்தனம் இவை எல்லாவற்றிலுமே ஊட்டச் சத்துக்கு ஒரு முக்கியப் பங்கு உண்டு.

குழந்தைகள், தேர்வுக்குத் தயாராகும் காலம் இது. பெற்றோருக்கு 'பிள்ளை நல்லா ஆரோக்கியமா இருக்கணுமே... பரீட்சை நல்லா எழுதணுமே...’ என்கிற கவலை தொடங்கிவிடும். தங்கள் பிள்ளை, சத்தான, நல்ல சமச்சீரான உணவை உண்கிறதா என்பதை உறுதிசெய்துகொள்வது பெற்றோரின் பொறுப்பு.

நல்ல உணவும், சரியான உணவுமுறையும்தான் குழந்தைகளின் உடல் மற்றும் உள நலனைப் பாதுகாக்கும்.

எக்ஸாம் ரெசிப்பி:

வெனிலா யோகர்ட்

தேவையானவை: 

முழு தானிய சீரியல் (கார்ன்ஃப்ளேக்ஸ் போன்றது) - அரை கப்,

கெட்டியான தயிர் - ஒரு கப்,

பொடியாக நறுக்கிய அன்னாசிப் பழம் - கால் கப்,

வறுத்த ஃப்ளாக்ஸீட்ஸ் - 2 டேபிள்ஸ்பூன்,

வெனிலா எசன்ஸ் - அரை டீஸ்பூன்,

வாழைப் பழம் - 1,

பொடியாகத் துருவிய முந்திரி,பாதாம் - ஒரு டேபிள்ஸ்பூன்,

பனைவெல்லம் - 2 டீஸ்பூன்,

ஸ்ட்ராபெர்ரி துண்டுகள்.

செய்முறை:

தயிரை மெல்லிய துணியால் வடிகட்டி, அதில் பனைவெல்லத் தூள், வெனிலா எசன்ஸ் சேர்த்து, ஒரு ஃபோர்க் அல்லது முட்டை அடிக்கும் கருவியால் நன்கு அடித்துக்கொள்ளவும்.

நீளமான ஒரு கிளாஸில், தானிய சீரியலை ஒரு அடுக்கு சேர்த்து, அதன் மேல் தயிர் வெல்லக் கலவையை ஒரு அடுக்காகப் போடவும். அதற்கும் மேல் ஒரு அடுக்கு பழங்களைப் போட்டு, மீண்டும் தயிர்க் கலவையை விடவும்.

அதன் மேல் ஃப்ளாக்ஸீட்ஸ், மீண்டும் தயிர், ஸ்ட்ராபெர்ரி துண்டுகள் என அடுக்கிய பிறகு கிளாஸைப் பார்த்தால், சீரியல், தயிர், பழங்கள், நட்ஸ் என கலர்ஃபுல்லாக இருக்கும்.

குறிப்பு: முழுக்க முழுக்க கார்போஹைட்ரேட், புரதம், கொழுப்புச் சத்து மற்றும் தாதுச் சத்து நிறைந்த முழுமையான உணவு இது. பரீட்சைக்குப் படிக்கும் குழந்தைகளுக்கு, சிறந்த காலை உணவு மட்டுமல்ல, மாலை நேரத்தில் கொடுப்பதற்கு அருமையான ஸ்நாக்ஸும் கூட. தயாரிப்பதும் மிகச் சுலபம்.

click me!