
தேவையானவை:
நூறு கிராம் கேரட், 25 கிராம் தேங்காய்.
செய்முறை:
கேரட்டையும், தேங்காயையும் துருவவும். பிறகு இரண்டு ஏலக்காய், தண்ணீர் கலந்து மிக்சியில் போட்டு சட்டினி போல் அரைக்கவும்.
அதை துணியில் பிழிந்து சாறு எடுத்துக் கொண்டால் கேரட் கீர் தயார்.
சுவை தேவையென்று விரும்பினால், வெல்லம் அல்லது தேன் சேர்க்கவும். கேரட் மற்றும் தேங்காய் இயற்கையிலேயே இனிப்புச் சுவைக் கொண்டதால் அப்படியே கூட சாப்பிடலாம்.
பயன்:
சிறுவர் முதல் முதியோர் வரை தினமும் சுவைத்துக் குடிக்க வேண்டிய உலகத்திலேயே முதல் தரமான ஒரு ஆரோக்கிய டானிக் இது. ஆங்கில மருந்துக் கடைகளில் விற்கும் டானிக்குகளைவிட கேரட் கீர் சிறந்தது.