உலர்ந்த திராட்சை பழத்தில் இவ்வளவு மகிமைகள் இருக்கு? நல்லா சாப்பிட்டு உடல் உறுதியை பெறலாம்...

 
Published : Jan 12, 2018, 12:55 PM ISTUpdated : Sep 19, 2018, 01:49 AM IST
உலர்ந்த திராட்சை பழத்தில் இவ்வளவு மகிமைகள் இருக்கு? நல்லா சாப்பிட்டு உடல் உறுதியை பெறலாம்...

சுருக்கம்

Have so much beauty in dry wine? You can eat and drink well ...

உலர்ந்த திராட்சை பழத்தின் மகிமைகள் 

** உலர்ந்த திராட்சைப் பழத்தில் சுண்ணாம்புச் சத்து அதிகம் உள்ளது. ஓர் உலர்ந்த திராட்சைப் பழம் 30 மிலி கிராம் சுண்ணாம்புச் சத்து கொண்டது. இதை குழந்தைகளுக்குக் கொடுத்து வந்தால், அவர்கள் நல்ல உடல் பலத்துடன் வேகமாக வளர்ந்து வருவார்கள். 

** எலும்புகளோடு, பற்களும் உறுதியாக அமையும். ஆகையால் வளரும் குழந்தைகளுக்கு இரவு உணவுக்குப் பின் தினசரி 15 முதல் 20 வரை திராட்சை பழத்தைக் கொடுத்து வருவது நல்லது.

** வாலிப வயது தாண்டி வயோதிக வயதிற்கு வரும் பொழுது தினசரி உலர்ந்த திராட்சைப் பழத்தை இரவு ஆகாரத்துக்குப் பின் சாப்பிட்டு வந்தால் சுறுசுறுப்பு ஏற்படும். எலும்புகள் உறுதியாக இருக்கும், பற்கள் கெட்டிப்படும்; பல் சம்பந்தமான எந்தக் கோளாறும் ஏற்படாது. இதயம் பலத்துடனிருக்கும். இதயத்துடிப்பு இயற்கை அளவிலேயே இருக்கும்.

** குழந்தைகளுக்கு பால் கொடுக்கும் பெண்கள் இரவு சாப்பாட்டிற்குப் பிறகு கைப்பிடியளவு உலர்ந்த திராட்சைப் பழத்தைச் சாப்பிட்டு வந்தால் சத்தான பால் உற்பத்தியாகும். வளரும் குழந்தைகளின் எலும்புகள் பலப்பட்டு கால்கள் வளையாது வளரும்.

** தற்போது உள்ள பருவ பெண்களுக்கு முடி உதிரும் பிரச்னை அதிகமாக உள்ளது. பியூட்டி பார்லர் சென்று ஆலோசனை கேட்பதை விட, தினமும் 10 உலர் திராட்சையை சாப்பிட்டாலே போதும் முடி கொட்டும் பிரச்னையிலிருந்து விடுபடலாம். தினமும் சாப்பிட மண்டையோடு பலப்படும்.

PREV
click me!

Recommended Stories

குளிர்கால சரும வறட்சிக்கு முற்றுப்புள்ளி
Skincare Routine : அழகின் உச்சத்தைத் தொட இந்த '6' பழக்கங்கள் போதும்; உங்களை பாக்குறவங்க அசந்துடுவாங்க!!