காட்டுச்சுரையின் மருத்துவ குணங்கள்…

 
Published : Nov 22, 2016, 03:44 PM ISTUpdated : Sep 19, 2018, 01:59 AM IST
காட்டுச்சுரையின் மருத்துவ குணங்கள்…

சுருக்கம்

பேய்ச்சுரை அல்லது காட்டுசுரை என அழைப்பர். காட்டுச்சுரை (அ) பேய்ச்சுரை கசப்பாக இருக்கும். மருத்துவத்துக்கு இவற்றின் இலை, கொடி, காய், விதை என அனைத்தும் பயன்படுகிறது. இந்த பேய்ய்சுரையின் மருத்துவக் குணங்கள் என்ன என்பதைப் பற்றிப் பார்ப்போம்.

எவ்வளவு கடுமையான விஷக்கடியாக இருந்தாலும் இது விஷத்தை முறித்து துரித குணத்தை உண்டாக்கிவிடும்.

பேய்ச்சுரையின் வேரைச் சேகரித்து நன்கு அரைக்க வேண்டும். இதை விஷத் தீண்டலுக்கு உள்ளானவர்களுக்கு இரண்டு கொட்டைப்பாக்கு அளவு உள்ளுக்குக் கொடுக்க வேண்டும். இந்த இலையை அரைத்து கடிவாயில் வைத்துக் கட்டிவிட வேண்டும். திடீரென ஏற்படும் பேதி, வாந்தி முதலியவற்றால் விஷத்துக்கு முறிவு ஏற்பட்டு விஷக்கடிக்கு ஆளானவரின் உயிர் மீளும்.

சிலவகைப் பாம்புகள் கடித்தால் அவற்றின் விஷ வேகம் மிகவும் துரிதமாக இரத்தத்தில் கலந்து, இருதயத்தை அடைந்து முச்சடைத்து மனிதன் இறந்துவிடுவான் , ஆனால் அவசர உணர்வோடு பேய்ச்சுரையை உபயோகித்தால் விஷத்தை முறித்துவிடலாம்.

கொடிய விஷப்பாம்பு கடித்து மனிதன் உணர்விழந்துவிட்டான் என்றால் முதலில் நாம் செய்யவேண்டியது அவனுக்கு உணர்வு ஊட்டி நினைவுண்டாக்க வேண்டியத்தான். இதற்கு பேய்ச்சுரையின் இலைகளைக் கசக்கிப் பிழிந்து சாறெடுத்து சம அளவு தும்பை இலைச்சாறு சேர்த்து மூக்கில் சில துளிகள் விட்டு ஊதிவிட வேண்டும். ஒரு தும்மலோடு விஷக்கடிக்கு ஆளானவருக்கு நினைவு திரும்பிவிடும்.

நினைவு திரும்பிய மறுகணமே பேய்ச்சுரையின் வேரை அரைத்து உள்ளுக்குக் கொடுத்துவிட வேண்டும். உடன் விஷ் முறிவு ஏற்பட்டு குணம் தெரியும். விஷக்கடிக்கு உள்ளானவரை விஷம் முறிவு ஏற்பட்டு சில நாட்கள் வரை பத்திய உணவு மேற்கொள்ளச் செய்ய வேண்டும்.

PREV
click me!

Recommended Stories

Pomegranate Benefits : தினமும் தவறாமல் ஒரு கிண்ணம் 'மாதுளை' சாப்பிட்டால் இந்த '5' பிரச்சினைகள் கிட்ட கூட வராது!
Men’s Skincare : 30 வயசு முடிஞ்ச ஆண்கள் முதல்ல 'இதை' செய்ங்க! எப்போதும் இளமையா, ஆரோக்கியமா இருப்பீங்க