உடல்நிலை சரியில்லாதவர்கள் தொடர்ந்து ஒரு மாதம் இந்தப் பழத்தைச் சாப்பிட்டு வந்தால்…

 
Published : Feb 11, 2017, 01:39 PM ISTUpdated : Sep 19, 2018, 01:05 AM IST
உடல்நிலை சரியில்லாதவர்கள் தொடர்ந்து ஒரு மாதம் இந்தப் பழத்தைச் சாப்பிட்டு வந்தால்…

சுருக்கம்

நீண்டநாள் உடல்நிலை சரியில்லாதவர்கள், தொடர்ந்து ஒரு மாதம் மாதுளைப் பழத்தைச் சாப்பிட்டுவந்தால், உடலுக்குப் பழைய தெம்பு கிடைத்துவிடும்.

மாதுளம் பழத்திற்கு வெளி நாடுகளில் இன்னொரு பெயர் உண்டு `சைனீஸ் ஆப்பிள்.’ பழங்களிலேயே பழமையானது, சிறந்தது மாதுளம்பழம்தான். உலகெங்கும் 720 வகை மாதுளைகள் உள்ளன.

* மருத்துவக் குணங்களும், அழகையும் அள்ளித்தரும் குணங்களையும் கொண்டது;

* பிளேக், புற்றுநோய் போன்றவற்றைக் குணமாக்கும் மகத்துவத்தை உடையது.

* உடலில் நைட்ரிக் ஆக்சைட் (Nitric Oxide) என்னும் தனிமம் குறையும்போது, மனஅழுத்தம் ஏற்படும். மாதுளை, நைட்ரிக் ஆக்சைடு அளவை அதிகரிக்கும் தன்மைகொண்டது. இதைச் சாப்பிட்டால், மனஅழுத்தம் குறையும்.

* உடற்பயிற்சி செய்வதற்கு முன்னர் ஒரு கைப்பிடி அளவு மாதுளைகளைச் சாப்பிட்டால் ரத்த ஓட்டம் சீராகி, உடற்பயிற்சி செய்வதற்கான ஆற்றல் கிடைக்கும்.

* மாதுளையில் உள்ள `எல்லஜிக் அமிலம்’ (Ellagic Acid) சூரிய வெப்பத்தால் தோல்களில் ஏற்படும் கருமையையும், தோல் புற்றுநோயையும் தடுக்கும்.

* மாதுளம் விதைகள் நம் தோல்களில் ஏற்படும் காயங்கள் மற்றும் தழும்புகளைக் குணமாக்கும் சக்திகொண்டவை. மாதுளம் பழத்தைச் சாப்பிடுவதாலும், அதன் விதையில் இருந்து தயாரிக்கப்படும் எண்ணெயை, காயங்களின் மீது தடவுவதாலும் காயம் விரைவில் குணமாகும். அத்துடன் தழும்புகளும் மறையும்.

* மாதுளம்பழச்சாறு தலைமுடியின் வேர்களை உறுதிப்படுத்தும். தலையில் ரத்த ஓட்டத்தைச் சீராக்கி, முடிவளர்ச்சியைத் தூண்டும். இதில் இருக்கும் வைட்டமின் மற்றும் தனிமங்கள் முடியைப் பளபளப்பாகவும் அடர்த்தியாகவும் மாற்றுகின்றன.

* தினமும் சாப்பிட்டால், மூளையில் உள்ள நரம்பியல் கடத்திகள் இயற்கையாகவே தன் சக்திகளை அதிகரித்து, மூளையைச் சுறுசுறுப்பாக்கும்; ஞாபகசக்தியை அதிகரிக்கச் செய்யும். அத்துடன் அல்சைமர் மற்றும் மூளைக் கட்டிகள் வராமல் தடுத்து பாதுகாக்கும்.

* வயோதிகத் தன்மையைத் தள்ளிப்போடும் பெரும்பாலான `ஆன்டி ஏஜிங்’ சீரம் மாதுளம்பழத்தின் கொட்டைகளில் இருந்துதான் தயாராகிறது. பழமாகச் சாப்பிடும்போது அதைவிட அதிகப் பலன்கள் கிடைக்கும்.

* அயல்நாடுகளில், பிறந்த குழந்தையின் மூளையில் எந்தப் பாதிப்பும் வராமல் தடுப்பதற்கு மாதுளை சிரப்பைத்தான் குழந்தைகளுக்குக் கொடுக்கிறார்கள். கர்ப்பிணிப் பெண்கள், தினமும் மாதுளம்பழச் சாறு குடித்துவர, குழந்தையின் மூளை வளர்ச்சி நன்றாக வளர துணைபுரியும்.

* மாதுளை, வயிற்றில் குவிந்துள்ள தேவையற்றக் கொழுப்புகளை நீக்கும் தன்மை உடையது. செரிமானப் பிரச்னைகளைச் சீராக்கி, உடல் எடை குறைவதற்கும், டைப் 2 வகை சர்க்கரைநோயைக் குறைப்பதற்கும் துணைபுரியும்.

* திருமணமான பெண்களுக்கு கருவுறுதலில் பிரச்னை இருந்தால், தினமும் காலையில் வெறும் வயிற்றில் மாதுளம்பழம் சாப்பிட்டுவரலாம். ஹார்மோன் குறைபாடுகள் நீங்கி, கர்ப்பப்பை ஆரோக்கியமாக இருக்கும்.

* மெனோபாஸ் காலங்களில் ஈஸ்ட்ரோஜென்னின் உற்பத்தி குறைந்து, மூட்டுவலி மற்றும் எலும்புத் தேய்மானம் அதிகரிக்கும். இது போன்ற காலங்களில் பெண்கள் தினமும் மாதுளம்பழ ஜூஸ் குடிக்கலாம். அது, உடலில் ஈஸ்ட்ரோஜென் உற்பத்தியைத் தூண்டும்; எலும்புகள் வலுப்பெற உதவும்.

* தொடர்ந்து இரண்டு வாரங்களுக்கு மாதுளம்பழச் சாற்றை அருந்தினால், ரத்த அழுத்தம் குறையும்.

PREV
click me!

Recommended Stories

Foot Sweating : கால் பாதத்தில் ரொம்ப வியர்க்குதா? இதுதான் 'காரணம்' உடனடி தீர்வுக்கு சூப்பர் வழி
Belly Fat Burning Exercises : வீட்டில் செய்யும் இந்த '4' எளிய பயிற்சிகள் போதும்! கொழு கொழுனு தொங்கும் தொப்பையை அப்படியே குறைக்கும்