சிறப்பு மிக்கது வெந்தயக் கீரை…

 
Published : Dec 23, 2016, 02:56 PM ISTUpdated : Sep 19, 2018, 02:53 AM IST
சிறப்பு மிக்கது வெந்தயக் கீரை…

சுருக்கம்

கீரைகளில் பல வகைகள் உண்டு. அதில் ஒவ்வொரு கீரையும் ஒருவித சுவை, கீரைகளில் மிக சிறப்பானது வெந்தயக் கீரையாகும். இந்தக் கீரையில் நார்ச்சத்து, இரும்புச் சத்து, கால்சியம் மற்றும் விட்டமின்கள் அதிகமாக உள்ளன. உடலை வல்லமையாக்கி, தோல் நோய்களைப் போக்கி, சூட்டைத் தணித்து, ரத்தத்தைப் பெருக்கி நம் ஆரோக்கிய வாழ்க்கைக்கு அடித்தளமாகத் திகழ்வது வெந்தயக் கீரை.

மருத்துவப் பயன்கள்:

வெந்தயக் கீரையுடன் பூண்டு, உப்பு சேர்த்து அரைத்துச் சாப்பிட்டால் உடல் சூடு குறையும்.

கொத்தமல்லி, கீரையுடன் சட்னி அரைத்து சாப்பிட்டால் மலச்சிக்கல் தீரும்.

வாழைப்பூ, மிளகு சேர்த்துக் கஷாயமாக்கிச் சாப்பிட்டால் ரத்தம் தூய்மையாகும். தோல் நோய்களும் குணமாகும்.

வெந்தயக் கீரையுடன் சிறிது ஓமம் சேர்த்து அரைத்துச் சாப்பிட்டால் வாயுக் கோளாறுகள் நீங்கும்.

PREV
click me!

Recommended Stories

Fish Eggs Benefits : மீனை விட 'மீன் முட்டை' ரொம்ப நல்லதாம்!! ஆனா 'இவங்க' மட்டும் சாப்பிடவே கூடாது
Knee Pain Relief Tips : தாங்கவே முடியாத மூட்டுவலிக்கும் 'நிவாரணம்' அளிக்கும் எளிய வழிகள்; ஒருமுறை செஞ்சு பாருங்க