தினமும் துளசி நீரைக் குடிப்பதால் கூட அதிக நன்மைகள் கிடைக்கும்…

First Published Jul 31, 2017, 12:56 PM IST
Highlights
Even drinking basil water every day will get more benefits ...


துளசி இந்த செடியின் அனைத்து பாகங்களும் மருத்துவ தன்மை நிறைந்தது. இயற்கை தந்த படைப்புகளில் துளசி அற்புதமான ஒரு சிறந்த மருந்தாகும்.

எந்த நோயாக இருந்தாலும் கவலைப்படாமல் துளசிநீர் மட்டும் அருந்தி வாருங்கள். அனைத்து நோய்களின் தாக்கமும் குறைந்து விடும்.

துளசி நீர் எப்படி செய்வது?

முதலில் சுத்தமான செம்பு பாத்திரமொன்றை எடுத்துகொண்டு அதனுள் சிறிதளவு சுத்தமான தண்ணீர் விட்டு ஒரு கை பிடியளவு துளசி இலையை எடுத்து நீரினுள் போடவும்.

இதை எட்டு மணிநேரம் மூடி வைத்து பின்பு பின்னர். வெறும் வயிற்றில். ஒரு டம்ளர்ரோ, அல்லது இரண்டு டம்ளரோ குடிக்க வேண்டும்.

இவ்வாறு 48 நாட்கள் பருகினால். பலவித நோய்களும் குணமாகும் அத்துடன் தோல் சுருக்கம் மறையும் நரம்புகள் பலப்படும் பார்வை குணமடையும் இதன் அர்த்தம் யாதெனில் நாம் இளமையுடன் என்றென்றும் வாழலாம்.

மேலும், உடலின் எந்த பகுதியில் புற்று நோய் இருந்தாலும் இந்த துளசி நீர் அருந்தினல் போதும் பூரணமாகக் குணம் ஆகும்.

வா‌ய் து‌ர்நா‌ற்ற‌த்தையு‌ம் போ‌க்கு‌ம். நமது உடலுக்கான கிருமி நாசினியாக துளசியை உட்கொள்ளலாம்.

துளசி இலையைப் போட்டு ஊற வைத்த நீரை தொடர்ந்து பருகி வந்தால் நீரழிவு வியாதி நம்மை நாடாது.

உடலின் வியர்வை நாற்றத்தைத் தவிர்க்க குளிக்கும் நீரில் முந்தைய நாளே கொஞ்சம் துளசி இலையைப் போட்டு வைத்து அதில் குளித்தால் நாற்றம் நீங்கும்.

தோலில் பல நாட்களாக இருக்கும் படை, சொரிகளையும் துளசி இலையால் குணமடையச் செய்ய முடியும்.

துளசி இலையை எலுமிச்சை சாறு விட்டு நன்கு மை போல் அரைத்து அந்த விழுதை தோலில் தடவி வந்தால் படைச்சொரி மறையும்.

சிறுநீர் கோளாறு உடையவர்கள் துளசி விதையை நன்கு அரைத்து உட்கொண்டு வர வேண்டும்.

கூடவே உடலுக்குத் தேவையான அளவிற்கு தண்ணீரும் பருகி வர பிரச்சினை சரியாகும்.

click me!