வெந்நீரை குடிப்பதால் இவ்வளவு நன்மைகள் உங்களுக்கு இலவசமாக கிடைக்கும்…

First Published Aug 29, 2017, 1:03 PM IST
Highlights
Drinking aquatic water will get you a lot of benefits ...


மிதமான நீரை பருகுவதை விட வெந்நீரில் அதிகளவில் நன்மைகள் உண்டு.

உடலை சுத்தம் செய்யும்

இந்த வெந்நீர் வேகமாக வயதாவதையும் குறைத்து இளமையை தக்க வைத்து கொள்ள உதவும். வெந்நீரால் இரத்த ஓட்டம் சீராவது மட்டுமின்றி நரம்பு மண்டலத்தின் ஒரத்தில் உள்ள கொழுப்புகளும் குறைந்துவிடும்.

மாதவிடாயினால் ஏற்படும் வலி குறையும்

மாதவிடாய் ஏற்படும் நாட்களில் பெண்கள் பெரிதும் அவதிபடுவார்கள். அந்த சமயத்தில் சூடான நீரை அடிக்கடி குடித்து வந்தால் மாதவிடாயினால் ஏற்படும் வலி வெகுவாகக் குறையும். உடற்பயிற்சி மையத்திற்கு சென்று போராடாமல் எளிதில் உடல் எடையை குறைக்க சிறந்த வழி வெந்நீர் குடிப்பதுதான்.

தேவையற்ற கொழுப்புக்களை அகற்றும்

மதியநேர சாப்பாட்டிற்குப் பின் சிறிது வெந்நீர் பருகினால் இதயத்தில் சேரக்கூடிய தேவையற்ற கொழுப்புக்களை அகற்றிவிடும் ஆற்றல் கொண்டது. காலை வேளையில் மலம் எளிதில் வரவில்லையா ஒரு தம்ளர் வெந்நீர் குடித்தால் எல்லாம் சரியாகிவிடும்.

வாயுத் தொல்லை நீக்கும்

சுக்கு கலந்த வெந்நீரை அடிக்கடிக் குடித்து வந்தால், வாயுத் தொல்லையே இருக்காது.

அஜிரணத் தலைவலி போக்கும்

அடிக்கடி வெந்நீர் குடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு அஜீரணத்தால் ஏற்படும் தலைவலி வரவே வராது.

நஞ்சு நீங்கும்

வெந்நீர் ரத்தத்தில் உள்ள நஞ்சை வெளியேற்றுகிறது.

வயிற்றுப் புண் வலி போக்கும்

வயிற்றுப் புண்ணினால் ஏற்படும் வலியைக் குறைக்க, மிதமான சூடான வெந்நீரைச் சிறிது சிறிதாகக் குடிப்பது நல்லது.

ஜீரணிக்கும்

நல்ல பலமான விருந்து சாப்பிட்ட பிறகு வெந்நீரைக் குடித்தால், சாப்பிட்ட விருந்தானது எளிதில் ஜீரணமாகி விடும்.

மிருதுவான சருமம் கிடைக்கும்

மிருதுவான சருமம் பெற, பார்லி ஒரு தேக்கரண்டி போட்டு வேகவிட்ட வெந்நீரை அடிக்கடி குடித்து வர வேண்டும்.

கால் வலி குறையும்

கால் பொறுக்கும் அளவுக்கு வெந்நீரை ஒரு டப்பில் விட்டு, அதில் கல் உப்பையும் போட்டுக் கலக்கவும். அந்த வெந்நீரில், கால் பாதங்களைப் பதினைந்து நிமிடங்கள் வைத்து எடுத்தால் கால் வலி குறையும்.

பித்தவெடிப்பு நீங்கும்

பித்தவெடிப்பு உள்ளவர்கள் வெந்நீரில் கால் பாதங்களை வைத்து எடுத்த பிறகு, பாதங்களை பியூமிஸ் ஸ்டோன் கொண்டு தேய்த்தால், நாளடைவில் பித்த வெடிப்பு குணமாகி விடும்.

கழிவுகள் வெளியேறும்

தாகம் எடுத்தால் பச்சைத் தண்ணீரைக் குடிக்காமல், பொறுக்கும் அளவு சூடான வெந்நீரைக் குடித்து வந்தால், உடம்பில் உள்ள வேண்டாத கழிவுகள் வெளியேறும்.

எடை குறையும்

சாப்பிடுவதற்கு அரை மணி நேரம் முன்பு, ஒரு தம்ளர் வெந்நீர் குடித்து வந்தால் உடல் எடை குறையும்.

click me!