
சைவ உணவு, இதயம் மற்றும் சிறுநீரகப் பிரச்னைகளையும், புற்றுநோய் ஆபத்தையும் குறைத்து, நீண்ட ஆயுளை உறுதி செய்கிறது. சைவம் சாப்பிடும் பெண்களைவிட ஆண்கள் அதிக நாள் வாழ்கிறார்கள். 2 துண்டு இஞ்சியை உப்பில் தோய்த்து மென்று, அதன் சாற்றை விழுங்கினால் வாயுத் தொல்லையும், அதனால் உண்டான வயிற்று வலியும் உடனே நீங்கும்.
பெருங்காயப் பொடியையும் உளுந்தையும் சம அளவு எடுத்துக் கொண்டு, நெருப்பில் இதைப் போட்டுப் புகையவிட்டு, அந்தப் புகையை நுகர்ந்தால் ஆஸ்துமா மூச்சுத் திணறல் சரியாகும். அதிமதுரப் பொடி, சந்தனத்தூள் சம அளவு கலந்து கொண்டு, இந்தக் கலவையில் கால் டீஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் பாலில் கரைத்துக் குடித்தால் குடல் புண்கள் ஆறும்.
உலர்ந்த ரோஜா இதழ்களை, பாசிப்பயறோடு சேர்த்து அரைத்து, சோப்புக்கு பதிலாக தேய்த்துக் குளிக்கலாம். பலவிதமான தோல் நோய் களை இது தடுக்கும். சம்பா கோதுமையை தண்ணீரில் ஊறவைத்து, விழுதாக அரைத்து பால் எடுத்து, அந்தப் பாலில் வெல்லம் சேர்த்துக் குடித்தால், ஒல்லியாக இருப்பவர்கள் சதை போடலாம்.
வேப்பிலை, மாவிலை இரண்டையும் காய வைத்து, பொடியாக்கி, சம அளவில் கலந்து பல் தேய்த்தால், ஈறுகளில் ரத்தம் வடிதல், பல்வலி, துர்நாற்றம் எல்லாம் சரியாகும். தேங்காய் எண்ணெய் யில் நெல்லிக்காய் வற்றலைப் போட்டுக் காய்ச்சி, அந்த எண்ணெயை தலையில் தடவி வந்தால் முடி உதிர்வது தடுக்கப்படும். நீர்த்த மோரில் கால் டீஸ்பூன் மிளகுத் தூளும் சீரகத் தூளும் கலக்கிக் குடித்தால், அஜீரணக் கோளாறு உடனே சரியாகும்.
உணவு சாப்பிட்டதும் 15 நிமிடங்கள் மென்மையான வாக்கிங் செல்வது ரத்தத்தில் சர்க்கரை அளவை சீராக்கி, சர்க்கரை நோய் தாக்கும் ஆபத்தை தள்ளிப் போடுகிறது. வாரத்தில் இரண்டு அல்லது மூன்று நாட்கள் அரை மணி நேரமாவது ஒதுக்கி, யோகா பயிற்சி செய்தாலே போதும்... இரத்த அழுத்தம் தானாகக் குறையும்.