வெந்நீரில் தினமும் குளிக்கக்கூடாது ஏன் தெரியுமா?

First Published Dec 5, 2016, 2:18 PM IST
Highlights


குளிர்காலங்களில், உடல் நலம் சரியில்லாத காலங்களில், பண்டிகை காலங்களில் எண்ணெய்தேய்க்கும் போது தவிர மற்ற நாட்களில் தினமும் வெந்நீரில் குளித்து பழகக்கூடாது. வெந்நீரில் குளிப்பதால் இரத்தக்கட்டு, உடல் சோர்வு, மற்றும் தூக்கமின்மை மறைந்து உடல் நன்றாக உறங்கும் என்பது உண்மைதான் ஆனால் அதையே தொடர்ந்து செய்தால் உடல் முழுமையாக சுகம் கற்றுக்கொண்டு சோம்பல் வந்துவிடும்.

பச்சைத்தண்ணீரில், குளத்தில், ஆற்றில், நீர்நிலைகளில் நீராடுவதால் உடலுக்கு தேவையான வெப்பசமநிலை கிடைக்கும்.  காலையில் எழுந்து தினமும் தண்ணீரில் வெறும் 5 நிமிடம் இருந்தாலே உடல் வெப்பம் குறைந்து, செல்கள் அனைத்தும் பழைய நிலைக்கு, திரும்பி நன்றாக இரத்தம் ஓட்டம் அதிகரித்து, உடலில் சுறுசுறுப்பு அதிகமாகும்.

இதயத்திற்கு சீரான இயக்கத்தை கொடுக்கும். நமது இருப்பிடம் வெப்பமான பகுதி என்பதால் நாள்தோறும் உடலுக்கு தேவையான வெப்பம் கிடைக்கின்றது. பச்சை தண்ணீரால் உண்டான குளிர்ச்சி கூட ஒரு மணிநேரத்தில் வெப்பமாகிவிடும். இதனால் எந்த பாதிப்பும் வராது.

மேலும் சுடுநீரால் தலைக்கு தேய்த்துக் குளிக்கும் போது தலை மயிர்க்கால்கள் அனைத்தும் மெலிந்து போகிவிடும்.  முடிவளர்ச்சி அறவே குன்றிவிடும். உடல் எந்த அளவுக்கு குளிர்ச்சியாக உள்ளதோ அந்த அளவுக்கு முடி வளர்ச்சி இருக்கும்.

வெந்நீரில் குளித்தால் தோல் மெலிந்துவிடும்.  மிருதுவாக இருக்காது.  உடலில் உள்ள எண்ணெய்ப்பசை நீங்கிவிடும். தோலின் மினு மினுப்பு குறைந்துவிடும்.  மெலனின்கள் பாதிக்கும். இதனால் எளிதில் தோல் நோய்களான கொப்புளங்கள், புண்கள், சொறி போன்றவை வந்துவிடும்.

எனவே வெந்நீரை தினமும் பயன்படுத்தாமல் எப்போதும் குளிர்ந்த நீரில் குளித்து பழகவும், இது நாள்தோறும் புத்துணர்ச்சியை தரும்.

click me!