உங்களுக்குத் தெரியுமா? ஹார்மோன் மாற்றங்களால் கூட தோல் கருமை அடையும்...

Asianet News Tamil  
Published : Jan 23, 2018, 01:14 PM ISTUpdated : Sep 19, 2018, 01:51 AM IST
உங்களுக்குத் தெரியுமா? ஹார்மோன் மாற்றங்களால் கூட தோல் கருமை அடையும்...

சுருக்கம்

Do you know The skin becomes dark even with hormonal changes ...

கழுத்தின் பின்பக்கம் இருக்கும் கருமையை போக்க டிப்ஸ்:

பெரும்பாலான பெண்கள் தங்கள் முகம்,கால் கை என பார்த்து பார்த்து அழகுப்படுத்திக் கொள்வார்கள். ஆனால், கழுத்தை மறந்துவிடுவார்கள். இன்னும் சிலர் கழுத்திற்கு சோப்பு கூட போட மாட்டார்கள்.

இப்படி கவனிப்பாரின்றி இருக்கும்போது , கழுத்து கருமையடைந்து அதன் பின் அதனைப் போக்க சகல வித்தையும் கையாள வேண்டியது இருக்கும். ஆகவே வந்தபின் காப்பதை விட எப்போதுமே கழுத்தை பராமரித்தால், அது கருமையடையாமல், அழகாக இருக்கும். 

கழுத்து ஏன் கருமையாகிறது:

உங்கள் கழுத்து கருமையடைய நிறைய காரணங்கள் உள்ளது. சரியான பராமரிப்பு இல்லாதிருத்தல், கர்ப்ப காலத்தில், ஹார்மோன் மாற்றங்களால், சூரிய கதிர்களால், தோலழற்சி, அலர்ஜி, தோல் கடினமாதல் ஆகியவற்றால் தோல் கருமையாகும்.

தோலை பழைய நிறத்திற்கு கொண்டு வர வீட்டிலேயே முயற்சிக்கலாம். 

தேவையானவை

ஓட்ஸ் -2 டேபிள் ஸ்பூன் தயிர் அல்லது யோகார்ட் -2 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு சில சாறு

ஓட்ஸ் கழுத்திலுள்ள இறந்த செல்களை அகற்றுகிறது. கருமையை போக்கி நிறத்தினை கூட்டுகிறது. தயிர் ஒரு இயற்கையான ப்ளீச் ஆகும். கருமையையும் சருமத்தில் படியும் அழுக்குகளையும் சீக்கிரம் அகற்றிவிடும். 

கழுத்தில் தொற்று இருந்தாலும்,கருமையாகும். தொற்றினை நீக்குவதில் தயிரின் பங்கு முக்கியமாகும். எலுமிச்சையும் இயற்கையான ப்ளீச் ஆகும். கருமை நிறத்தை போக்கி,அழுக்கு,எண்ணெய் பசையை போக்குகிறது.

செய்முறை

மேற்கூறிய பொருட்களை நன்றாக ஒன்றுடன் ஒன்று கலந்து , கலவையாக கழுத்தில் போட்டு, சில நிமிடங்களுக்கு மசாஜ் செய்ய வேண்டும். 20 நிமிடங்களுக்கு பிறகு,வெதுவெதுப்பான நீரினில் கழுவவும். 

பயன்பாடு

இப்படி வாரம் ஒருமுறை செய்தால், கருமையற்ற , மிருதுவான கழுத்து திரும்ப உங்களுக்கு கிடைக்கும். அதனுடன் கழுத்திற்கு முறையான பயிற்சி செய்தால் ,கழுத்தில் எக்ஸ்ட்ரா சதை தொங்காமல், அழகாய் வைத்திருக்கலாம்.

PREV
click me!

Recommended Stories

இதயத்தைப் பாதுகாக்கும் '7' முக்கியமான டிப்ஸ்
Peanut Tips : வேர்க்கடலை விரும்பியா? இந்த '6' விஷயங்கள் உங்களுக்குதான்!