
இன்றைய உலகில் ஆணும், பெண்ணும் குண்டு உடலை குறைக்க ஆறு வாரங்களில் அழகான ‘இடை’ ன்னு விளம்பரங்களை நம்பி மாத்திரை, லேகியம் வாங்கிச் சாப்பிட்டு, எப்படியாவது உடல் எடையை, குறைக்க பணத்தை தண்ணியா செலவழிக்கறதும் உண்டு.
ஆனா, இவ்வளவு சிரமம் இல்லாமல், உடல் எடை குறைக்க முடியும். எப்படி?
ஆஸ்திரேலியா நாட்டில் இருக்கிற மெல்போர்ன் உணவு உயிர் தொழில்நுட்ப வல்லுனர் ஆங்குர் தேசாய் மற்றும் லா ட்ரோப் பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவர்கள் சேர்ந்து ஒரு ஆய்வு செய்துள்ளனர்.
அதன்படி, குண்டான உடலை இளைக்கச் செய்வதில் கரும்பு முக்கிய பங்கு வகிக்கிறது.
கரும்புச் சாற்றில் உள்ள ரசாயனங்கள், உடலில் சேர்ந்துள்ள தேவையற்ற கொழுப்பை கரையச் செய்கிறது. இதன் மூலம் உடல் எடை குறைகிறது. எடை குறைவதால் ஏற்படும் உடல் சோர்வையும் கரும்பு சாறு தடுக்கிறது. ரத்த அழுத்தத்தையும் இது கட்டுப்படுத்துகிறது.
உடலில் சக்தியையும் அதிகரிக்கச் செய்கிறது. பயன்படுத்த தொடங்கிய 12 வாரங்களில் இதன் பலன் வெளிப்படையாக தெரிய வரும்.
பக்க விளைவுகள் எதையும் ஏற்படுத்தாமல், உடல் எடையை குறைக்க கரும்பு பயன்படுகிறது எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
இளம் வயதினர் தினமும் 10 மணி நேரம் உறங்கினால் உடல் எடை அதிகரிக்காது என்று பெரல்மேன் மருத்துவ கல்லூரி நிபுணர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
உடல் எடையை குறைக்க மக்கள் பலவிதமான உடற்பயிற்சிகள் மற்றும் பலதரப்பட்ட மருத்துவ சிகிச்சைகளை மேற்கொள்கிறார்கள்.
ஆனால், அதற்கெல்லாம் மேலாக நீண்ட நேரம் தூங்குவதே உடல் எடை அதிகரிக்காமல் இருக்கும் சிறந்த மருந்து என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, 14 முதல் 18 வயது வரையிலான இளம் வயதினர் இரவில் தினமும் 10 மணிநேரம் தூங்கினால் உடல் எடை அதிகரிக்காது. அதே நேரத்தில் அதிக உடல் எடை இருந்தாலும் தானாக குறைந்து விடும் என்றும் அந்த ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது.