உங்களுக்குத் தெரியுமா? தேனை காய்ச்சி மிளகுத்தூள் படிகாரம் போட்டு குடித்தால் இருமல் நிற்கும்...

 
Published : Jul 05, 2017, 01:20 PM ISTUpdated : Sep 19, 2018, 12:50 AM IST
உங்களுக்குத் தெரியுமா? தேனை காய்ச்சி மிளகுத்தூள் படிகாரம் போட்டு குடித்தால் இருமல் நிற்கும்...

சுருக்கம்

Do you know Pepper soaked in honey and stinked with tea.

1) கல்லடைப்புக்கு – தாம்பூலம்

எருக்கம் பூவின் மொக்கு ஏழு எடுத்து சுண்ணாம்பு போடாமல் வெற்றிலை பாக்குடன் வைத்து உண்ணவும். இப்படி 2 அல்லது 3 வேளையில் கல் விழும்.

2) தாய்ப்பால் சுரக்க கீரை

கோவை இலையை நெய்யில் வதக்கி, வெள்ளைப் பூண்டு சேர்த்து வதக்கி, கால் வயிறு கீரை, காலையில் உண்டு விட்டு ஆகாரம் சாப்பிடவும். இவ்வாறு 3 நாள் செய்ய பால் சுரக்கும்.

3) அரையாப்பு தீர

எலுமிச்சம் வேர், சத்திசாரணைவேர் அரைத்து கெச்சக்காய் அளவு நல்லெண்ணையில் கலந்து சாப்பிடவும் 3 நாளில் தீரும்.

4) குழந்தைகள் பேதிக்குப் பிட்டு வகை

புளியாரை, வாழைப்பூ சமனெடை எடுத்து இடித்து பிட்டவியல் செய்து தேன் சேர்த்து பிசைந்து கொடுக்க பேதி நிற்கும்.

5) கர்ப்பிணிகளுக்கு குடிநீர்

கர்ப்பிணிகளுக்கு மலசலம் கட்டினால், ஒரு பலம் பழைய நெல்லிவற்றலை இடித்துக் குடிநீர் செய்து சமஅளவு பசும்பால் விட்டு சாப்பிட, மலசலம் வெளியேறும்.

6) பசி உண்டாக

புதினா சாறு 1 பங்கு, எலுமிச்சம் பழச்சாறு 3 பங்கு கூட்டி கொஞ்சம் சர்க்கரை சேர்த்துக் கொள்ளவும்.

7) இருமலுக்கு தேனூறல்

தேனை நன்றாய்க் காய்ச்சி சுடுகையில் மிளகுத்தூள் படிகாரம் (12 கிராம்) போட்டுக் குலுக்கி கொடுக்கவும்.

8) வெள்ளை தீர்க்கும் புங்கன்

புங்கன் கொழுந்தை நெகிழ அரைத்து நல்லெண்ணெய் கலந்து கொடுக்க வெள்ளை தீரும்.

9) அரையாப்புக்கு அரிசிக் களிம்பு

முருங்கை வேர்ப்பட்டையும், புழுங்கலரிசியும் உப்பும் சேர்த்து அரைத்து கட்ட கட்டி கரையும்.

10) துத்தி டீ

துத்தியிலை கஷாயம் வைத்து பால், சர்க்கரை கலந்து கொடுக்க மேகச்சூடு தணியும்.

PREV
click me!

Recommended Stories

உப்பு vs சர்க்கரை! தயிரில் எதை கலந்து சாப்பிட்டால் ஆரோக்கியத்திற்கு நல்லது?
Skipping Exercise : வெறும் 15 நிமிடங்கள் ஸ்கிப்பிங்.. எடை குறைப்பு முதல் நன்மைகளோ கோடி!!