உங்களுக்குத் தெரியுமா? உணவில் ஆயில் குறைத்தால், வாழ்வில் ஆயுள் குறையாது…

 
Published : Apr 26, 2017, 01:46 PM ISTUpdated : Sep 19, 2018, 03:12 AM IST
உங்களுக்குத் தெரியுமா? உணவில் ஆயில் குறைத்தால், வாழ்வில் ஆயுள் குறையாது…

சுருக்கம்

Do you know If you lose oil in the diet life will not decrease in life

நம் உடலுக்கு சூரியகாந்தி எண்ணெயே சிறந்தது ஏன்?

1.. சூரிய காந்தி எண்ணெயில் வைட்டமின் ஈ சத்து ஓரளவு இருப்பதால் உடலில் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

கொழுப்பின் மூன்று வகைகள்:

1.. நிறைவுற்றக் கொழுப்பு அமிலம்,

2.. ஒற்றை நிறைவுறாக் கொழுப்பு அமிலம்,

3.. பன்மை நிறைவுறாக் கொழுப்பு அமிலம் என மூன்று விதமாகப் பிரிக்கப்படுகின்றன.

சூரிய காந்தி எண்ணெயில் நிறைவுற்றக் கொழுப்பு அமிலம் குறைந்த அளவும், ஒற்றை நிறைவுறாக் கொழுப்பு அமிலம் மிதமான அளவும், பன்மை நிறைவுறாக் கொழுப்பு அமிலம் அதிகமாகவும் இருக்கின்றன.

1.. நிறைவுற்ற கொழுப்பு அமிலம் அதிகமாகும்போது, அது கொழுப்பாக மாறி உடலுக்குக் கெடுதலை விளைவிக்கும்.

2.. ஒற்றை நிறைவுறாக் கொழுப்பு அமிலம் உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் குறைக்கும்.

3.. பன்மை நிறைவுறாக் கொழுப்பு அமிலம்தான் நம் உடலுக்கு மிகவும் அத்தியாவசியக் கொழுப்பு அமிலம். இது ரத்தம் உறைவதைத் தடுக்கும். உடலுக்கு எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும்.

100 கிராம் சூரிய காந்தி எண்ணெயில்

நிறைவுற்றக் கொழுப்பு அமிலம் - 9.1%,

ஒற்றை நிறைவுறாக் கொழுப்பு அமிலம் - 25.1%,

பன்மை நிறைவுறாக் கொழுப்பு அமிலம் - 66.2% இருக்கவேண்டும்.

பொதுவாக ஒருவருக்கு நாள் ஒன்றுக்கு 25 முதல் 30% தேவை.

25 கிராம் மற்ற எண்ணெயில்...

நிறைவுற்றக் கொழுப்பு அமிலம் - 7%

ஒற்றை நிறைவுறாக் கொழுப்பு அமிலம் - 15%

பன்மை நிறைவுறாக் கொழுப்பு அமிலம் - 8% இருக்கவேண்டும்.

ஆனால், நமக்கு, சூரிய காந்தி எண்ணெயைப் பொருத்தவரை, நாள் ஒன்றுக்கு 5 கிராம் எண்ணெயே போதுமானது. அதாவது ஒன்று முதல் 2 டீஸ்பூன் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

இந்த அளவில் சூரிய காந்தி எண்ணெயைப் பயன்படுத்தினால் எப்போதும் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

PREV
click me!

Recommended Stories

Mookirattai Keerai : பவர்புல் கீரை 'அனைத்து' பிரச்சினைகளுக்கும் ஒரே தீர்வு தரும் 'மூக்கிரட்டை கீரை' பத்தி தெரியுமா?
Walking Benefits : ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை '5' நிமிடம் வாக்கிங்! இதுவே போதும் '4' முக்கிய நன்மைகள் இருக்கு