உங்களுக்குத் தெரியுமா? எல்லாரும் விரும்பி சாப்பிடும் சமோசாவில் 260 கிலொ கலோரி இருக்கு...

Asianet News Tamil  
Published : Nov 30, 2017, 02:05 PM ISTUpdated : Sep 19, 2018, 01:31 AM IST
உங்களுக்குத் தெரியுமா? எல்லாரும் விரும்பி சாப்பிடும் சமோசாவில் 260 கிலொ கலோரி இருக்கு...

சுருக்கம்

Do you know Everyone loves to have 260 kilo calories in samosa

உணவு என்பது நாம் வாழ்வதற்கு தேவைப்படும் ஒரு முக்கிய பொருளாகும். அது மருந்தை போலத் தான். அதிலும் ஆரோக்கியமான உணவை தேவையான அளவு உட்கொண்டால், உடல் ஆரோக்கியமாக விளங்கும். அதுவே ஆரோக்கியமில்லாத உணவுகளை அளவுக்கு அதிகமாக உட்கொண்டால், உடலில் பல வியாதிகள் வந்து சேரும். 

நாம் பெரும்பாலும் விரும்பி உண்ணும் இந்திய உணவுகளில் எவ்வளவு கலோரிகள் இருக்கிறது? என்பதை தெரிஞ்சுக்குங்க...

கோழி குருமா

மிதமான க்ரீமி வகை உணவான கோழி குருமா பல இந்திய வீடுகளில் தயார் செய்யப்படும் உணவாகும். கோழி, இஞ்சி பூண்டு பேஸ்ட், வெண்ணெய் மற்றும் நெய் ஊற்றி செய்யப்படுவது தான் இந்த உணவு.

இந்த உணவில் உள்ள கலோரி : 800-870 கிலோ கலோரிகள்.

சமோசா

சமோசாவானது உருளைக்கிழங்கு, வெங்காயம் மற்றும் பட்டாணிகள் சேர்த்து செய்யப்படும். மிகவும் புகழ் பெற்ற நொறுக்குத் தீனியாக விளங்கும் சமோசா, மாலை நேரங்களில் உண்ணப்படும். இதனை தயாரிக்க உருளைக்கிழங்கு மசாலா, கோழி (அரிதாக), காய்கறி, எண்ணெய் மற்றும் உப்பு தேவைப்படும்.

இந்த உணவில் உள்ள கலோரி : 2 சைவ சமோசாவில் தோராயமாக 260 கிலோ கலோரிகள். அதுவே 2 அசைவ சமோசாவில் 320 கிலோ கலோரிகள் இருக்கும்.

தந்தூரி சிக்கன்

தந்தூரி சிக்கன் என்பது மிகவும் புகழ் பெற்ற இந்திய உணவாகும். வறுத்த கோழி, தயிர் மற்றும் மசாலாக்களை கொண்டு தயார் செய்யப்படும் உணவு இது.

இந்த உணவில் உள்ள கலோரி : ஒரு கோழியின் காலில் தோராயமாக 264-300 கிலோ கலோரிகள் இருக்கும்.

மெட்ராஸ் சிக்கன்

சிக்கன், பன்றிக்கறி, மாட்டிறைச்சி, ஆட்டுக் கறி மற்றும் கொத்துக்கறி போன்றவைகளை வைத்து இந்த காரமான குழம்பை தயாரிக்கலாம்.

இந்த உணவில் உள்ள கலோரி : 100-200 கிராமில் தோராயமாக 450-500 கிலோ கலோரிகள் இருக்கும்.

புலாவ்

சாதத்தில் சுவையை சேர்க்க மசாலாக்கள் சேர்த்து, அதில் கோழி, காய்கறி அல்லது மீனின் ஸ்டாக் போன்றவற்றை சேர்த்து சமைக்கும் உணவு தான் புலாவ்.

இந்த உணவில் உள்ள கலோரி : ஒரு முறை உட்கொள்ளும் அளவில் தோராயமாக 449 கிலோ கலோரிகள் இருக்கும்.

வெங்காய பஜ்ஜி

இந்த காரசாரமான இந்திய நொறுக்குத் தீனி உருளைக்கிழங்கு பஜ்ஜியை போன்றது தான். பல வடிவங்களில் செய்யப்படும் பஜ்ஜியை பல இந்திய உணவுகளை உண்ணும் போது அதனுடன் சேர்த்து உண்ணலாம். தனியாகவும் உண்ணக்கூடிய இந்த உணவு மிகவும் புகழ் பெற்ற உணவாக விளங்குகிறது.

இந்த உணவில் உள்ள கலோரி : 2-3 பஜ்ஜிகளில் 190 கிலோ கலோரிகள் இருக்கும்.

சிக்கன் டிக்கா மசாலா

வறுத்த கோழி கறி துண்டுகளை காரசாரமான கிரேவியில் போட்டு தயார் செய்வது தான் சிக்கன் டிக்கா மசாலா. காரசாரமான ஆரஞ்சு நிறமுடைய க்ரீமி உணவு இது. இது நம் இந்திய பாரம்பரிய உணவே அல்ல. சிக்கன் டிக்காவை போல் உள்ளதால், முகலாய உணவு வகையான இது இப்பெயரை பெற்றது. இருப்பினும், இந்தியாவிலும் வெளிநாட்டிலும் புகழ் பெற்ற உணவாக விளங்குகிறது இது.

இந்த உணவில் உள்ள கலோரி : ஒரு சின்ன பௌலில் 438-557 கிலோ கலோரிகள் (வெண்ணெய் உபயோகத்தை பொருத்தது) இருக்கும்.

கோழி குழம்பு

கோழி குழம்பு என்பது ஒரு பொதுவான சுவைமிக்க இந்திய உணவாகும். கோழி மற்றும் குழம்பு கலந்து செய்யப்படுவது தான் இந்த உணவு. இதில் சேர்க்கப்படும் மசாலா பொடிகளில் போக குங்குமப்பூ, இஞ்சி மற்றும் இதர பொருட்களையும் சேர்க்கலாம்.

இந்த உணவில் உள்ள கலோரி : ஒரு முறை பரிமாறும் அளவில் 583 கிலோ கலோரிகள் இருக்கும்.


மட்டன் ரோகன் ஜோஷ்

ரோகன் ஜோஷ் என்ற வாசனையான மட்டன் உணவு புகழ் பெற்ற காஷ்மீரி உணவாகும். இதனை அதிகபட்ச வெப்பத்தில் சமைக்க வேண்டும்.

இந்த உணவில் உள்ள கலோரி : ஒரு முறை பரிமாறும் அளவில் 589 கிலோ கலோரிகள் இருக்கும்.

மட்டன் கீமா

குறும்பாட்டு கறியை காரசாரமான மசாலாக்கள் மற்றும் பச்சை பட்டாணியுடன் சேர்த்து சமைக்கப்படும் உணவு இது.

இந்த உணவில் உள்ள கலோரி : ஒரு முறை பரிமாறும் அளவில் 502-562 கிலோ கலோரிகள் இருக்கும்.

PREV
click me!

Recommended Stories

டயட்டில் இருப்பவரா நீங்கள்.? வெள்ளை அரிசி vs பழுப்பு அரிசி – எது எடை குறைக்க உதவும்?
5 வயது குழந்தை முதல் 75 வயது முதியவர் வரை… தினமும் எவ்வளவு நேரம் நடக்க வேண்டும்?