தண்ணீரால் பரவும் நோய்கள் பற்றி தெரியுமா?

 
Published : Nov 01, 2016, 04:34 AM ISTUpdated : Sep 19, 2018, 12:56 AM IST
தண்ணீரால் பரவும் நோய்கள் பற்றி தெரியுமா?

சுருக்கம்

பொதுவாக 70% நோய்கள் தண்ணீரின் மூலம்தான் பரவுகின்றன. ஜலதோஷம், டைபாய்டு, வைரஸ் ஜீரம், காலரா, மஞ்சள் காமாலை நோய், போன்றவைகள் தண்ணீர் மூலம் பரவும் நோய்கள்.

குழந்தைகள் முதல் பெரியவர் வரை தாக்கும்  (ஆஸ்மாட்டிக் பிரங்கைட்டிஸ்) நீர்க்கணை நோய் ஏற்பட வாய்ப்புள்ளது. மூச்சுக்குழல்களில் சுருக்கம் ஏற்படுவதால் நீர்க்கணை மற்றும் இருமல் ஏற்படுகிறது.

வீட்டின் அருகே சுற்றுப்புறங்கள் தூய்மையில்லாத காரணத்தால் கழிவுநீர்களில் வாழும் கொசுக்கள் மற்றும் ஈக்கள் மூலமாக மலேரியா மற்றும் மஞ்சள் காமாலை நோய்ஏற்படலாம்.

மழைகாலங்கள் மட்டுமல்லாமல் கோடைக்காலங்களிலும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் இந்த நோய்கள் அதிகம் தாக்க வாய்ப்புள்ளது.

பொதுவாக தண்ணீரை கொதிக்க வைத்து வடிகட்டி குடிக்க வேண்டும்.  திறந்த வெளியில் மலம் ஜலம் கழிப்பதை தவிர்க்க வேண்டும்.  

மாதம் ஒருமுறை வரும் முன்காப்போம் திட்டம் மூலமாக அனைத்து அரசு ஆரம்ப சுகாதார மருத்துவமனைக்கு உட்பட்ட துணை சுகாதார மையங்களில் அதிநவீன கருவிகள் மற்றும் சிறப்பு மருத்துவர்களை கொண்டு மருத்துவ முகாம் நடைபெற்று வருகின்றது.

நோய்தாக்கம் உள்ள அனைவரும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி உடல்நலத்தைக் காத்துக் கொள்ளவும்.

 

PREV
click me!

Recommended Stories

குளிர்கால சரும வறட்சிக்கு முற்றுப்புள்ளி
Skincare Routine : அழகின் உச்சத்தைத் தொட இந்த '6' பழக்கங்கள் போதும்; உங்களை பாக்குறவங்க அசந்துடுவாங்க!!