
Do Shampoos and Body soaps Contain Cancer Causing Chemicals : முந்தைய காலங்களில் சோப்பு, ஷாம்பு போன்றவை கிடையாது. சீயக்காய், கடலை மாவு, குளியல் பொடி, தேய்காய் நார் தான் மக்கள் பரவலாக பயன்படுத்தினார்கள். ஆனால் இப்போது காலம் மாறிவிட்டது. எக்கசக்கமான பிராண்டுகளில் ஏகப்பட்ட உடல் பராமரிப்பு பொருள்கள் உள்ளன. உடலுக்கு பயப்படுத்தும் சோப்பு, லோஷன்கள், ஷாம்பு போன்றவை கடைகளில் மலிவாக கிடைக்கின்றன. இந்நிலையில் அண்மையில் வெளியான ஆய்வு முடிவுகள் அதிர்ச்சியை கிளப்பியுள்ளன. பெண்கள் பயன்படுத்துகிற தனிப்பட்ட பராமரிப்புப் பொருட்களில் புற்றுநோயை ஏற்படுத்தக் கூடிய ஃபார்மால்டிஹைடு இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழல் அறிவியல் & நச்சுயியல் கடிதங்களில் (Environmental Science & Toxicology Letters) வெளியான தகவலின்படி, கருப்பு, லத்தீன் அமெரிக்க பெண்களில் பலர் பயன்படுத்தும் அழகுசாதன பொருள்களில் ஃபார்மால்டிஹைட்டை வெளியிடும் இரசாயனங்கள் இருப்பதாக தெரியவந்துள்ளது.
லாஸ் ஏஞ்சல்ஸில் 70 கருப்பு மற்றும் லத்தீன் பெண்களிடம் ஆய்வு செய்யப்பட்டது. இதில் அவர்கள் உபயோகிக்கும் உடல் பராமரிப்பு பொருட்கள் குறித்து சில விஷயங்கள் தெரிய வந்துள்ளன. இந்த ஆய்வில் ஒரு செயலி மூலம், ஆய்வில் கலந்துகொண்டவர்களிடம் அவர்கள் பயன்படுத்தும் லோஷன், சோப்பு போன்றவற்றின் படங்கள் பெறப்பட்டன. அவர்களில் 53% பேர் ஃபார்மால்டிஹைட் வெளியிடக் கூடிய இரசாயனங்கள் இருக்கும் ஒரு தயாரிப்பையாவது உபயோகித்ததாக முடிவுகள் காட்டுகின்றன. சிலர் தினமும் அல்லது வாரத்திற்கு ஒருமுறை அவற்றை பயன்படுத்தினர். இதில் 58% முடி பராமரிப்பு பொருட்களில் புற்றுநோயை ஏற்படுத்தும் காரணிகள் இருப்பது தெரியவந்தது. ஷாம்பு, லோஷன், உடலுக்கு போடும் சோப்புகள், கண் இமை பசைகளிலும் கூட புற்றுநோய் ஏற்படுத்தும் காரணிகள் இருப்பது கண்டறியப்பட்டது.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிறுவனம் (EPA) முன்னரே ஃபார்மால்டிஹைட் மனிதர்களின் ஆரோக்கியத்திற்கு தீமை செய்யும் என தெரிவித்துள்ளது. ஃபார்மால்டிஹைட் வெளியிடும் தயாரிப்புகளை பயன்படுத்துவது ஆபத்தானதாகும். அதனால் நீங்கள் வாங்கும் சோப்பு, ஷாம்பு போன்ற தயாரிப்புகளில் சேர்க்கப்பட்டுள்ள ரசாயனங்கள் குறித்து படித்து பார்த்து அவற்றை வாங்குங்கள். ஃபார்மால்டிஹைட் போன்ற ஆபத்தான பொருள்களை வெளியிடும் தயாரிப்புகள் தவிருங்கள்.
தவிர்க்க வேண்டிய பொருட்கள்
நீங்கள் வாங்கும் தயாரிப்புகளில் பின்வரும் பொருள்கள் இருந்தால் வாங்க வேண்டாம்.
ஃபார்மால்டிஹைடு- வெளியிடுபவை: