சாப்பிட்டு முடித்தபின் குளிர்ச்சியான தண்ணீரை தயவு செய்து குடிக்காதீர்கள்... அவ்வளவு  ஆபத்தாம்...

 
Published : May 09, 2018, 01:44 PM ISTUpdated : Sep 19, 2018, 02:20 AM IST
சாப்பிட்டு முடித்தபின் குளிர்ச்சியான தண்ணீரை தயவு செய்து குடிக்காதீர்கள்... அவ்வளவு  ஆபத்தாம்...

சுருக்கம்

Do not drink cold water after eating and eating ...

கிராம புறங்களை விட  நகர்புறங்களில் `பிரிட்ஜ்’ பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகம். குளிர்ச்சியான தண்ணீர் குடிப்போரின் எண்ணிக்கையும் உயர்ந்துவிட்டது. 

காலை உணவானாலும் சரி, இரவு உணவானாலும் சரி சாப்பிட்டு முடித்த பின்னர் குளிர்ச்சியான நீரை பருகுவதை பலர் வாடிக்கையாக வைத்துள்ளனர். 

இது மிகவும் ஆபத்தான செயல் என்று எச்சரிக்கிறார்கள் மருத்துவர்கள். அவர்கள் தரும் விளக்கம் இதோ....

"சாப்பிட்டு முடித்தவுடன் குளிர்ச்சியான தண்ணீரை குடித்தால், அது நாம் சாப்பிட்ட உணவில் உள்ள எண்ணெய்த் துகள்களை கெட்டியாக்கி விடுகிறது. இதனால், சாப்பிட்ட உணவு செரிமானம் ஆவதில் சிக்கல் ஏற்படுகிறது. 

அதுமட்டுமின்றி, உடலில் இருக்கும் கொழுப்பின் அளவு அதிகரிக்கவும் அது காரணமாகிவிடுகிறது. இந்த நிலை தொடர்ந்தால் இதயம், சிறுநீரகம் சம்பந்தப்பட்ட பல பிரச்சனைகள் வரும்" என்கின்றனர் மருத்துவர்கள்.

இதய நோயாளிகள் சாப்பிடும்போது கூல் வாட்டரை தொடவேக் கூடாது என்றும் அவர்கள் அறிவுறுத்துகிறார்கள். 

மருத்துவர்களின் இந்த எச்சரிக்கை உண்மைதானா? என்பதை நீங்களே ஆய்வு செய்து நிரூபித்துக் கொள்ளலாம். 

எப்படி? 

நாம் சாப்பிடும் அல்வா-வின் சிறு பகுதியை எடுத்து அப்படியே பிரிட்ஜில் வைத்து விடுங்கள்.

சில மணி நேரம் கழித்து அதை எடுத்துப் பாருங்கள். அல்வா கெட்டியாகி இருக்கும். ஏற்கனவே அதில் இருந்த எண்ணெய்ப் பசை சுத்தமாக காணாமல் போய் இருப்பது தெரியும். ஆனால், அந்த எண்ணெய் அல்வாவில் அப்படியே ஆங்காங்கே படிந்து திண்ணமாக வெள்ளை நிறத்தில் மாறியிருக்கும். உங்கள் விரலை அதில் வைத்தால் உடனே அது உருகிவிடும். 

சாப்பிட்டு முடித்ததும், நம் உடலுக்குள் ஐஸ் வாட்டர் சென்றால், எண்ணெய்த் துகள்கள் இதுபோன்றுதான் மாறி சிக்கலை ஏற்படுத்தி விடுகின்றன. 

இதனால் தான் மருத்துவர்கள் சாப்பிட்டு முடித்தபின்னர் குளிர்ச்சியான தண்ணீரை குடிக்க வேண்டாம் என்கின்றனர்.
 

PREV
click me!

Recommended Stories

Garlic with Jaggery : பூண்டு + வெல்லம்.. வெறும் வயிற்றில் சாப்பிட்டால் 'உடலில்' இந்த அதிசயங்கள் நடக்கும்!
Lip Balm : லிப் பாம் போடுறவங்க கண்டிப்பா 'இந்த' விஷயத்தை கவனிக்கனும்! அடுத்த முறை 'அந்த' தப்பை பண்ணாதீங்க