தூக்கமின்மையால் அவதி படுகிறீர்களா? இதை ஜூஸாக்கி குடிச்சு பாருங்க…

Asianet News Tamil  
Published : Mar 20, 2017, 02:32 PM ISTUpdated : Sep 19, 2018, 02:43 AM IST
தூக்கமின்மையால் அவதி படுகிறீர்களா? இதை ஜூஸாக்கி குடிச்சு பாருங்க…

சுருக்கம்

Do Awadhi insomnia Look at this kuticcu juice

மன அழுத்தம், பதட்டம், அதிக வேலை, ஸ்மார்ட் போன் மற்றும் கணினி பயன்பாடு இது போன்ற பல காரணங்களினால் ஒருவரது தூக்கம் பாதிக்கப்படுகிறது. எனவே இயற்கையான முறையில் உறக்கம் சார்ந்த ஹார்மோன்களை சமநிலைப்படுத்தி நல்ல உறக்கத்தை ஏற்படுத்த அற்புதமான வழி இதோ.

தேவையான பொருட்கள்

வாழைப்பழம் – 1

நீர் – 1 கப்

இலவங்கப் பட்டை – சிறிதளவு

செய்முறை

முதலில் வாழைப்பழத்தின் இரு முனைகளையும் வெட்டி 10 நிமிடம் வரை அதை நீரில் நன்றாக வேக வைக்க வேண்டும்.

பின் அந்த நீரில் தேவை என்றால் பொடித்த இலவங்கப் பட்டையை கலந்துக் கொள்ளலாம். இப்போது பானம் தயார்.

குடிக்கும் முறை

தினமும் இரவு தூங்குவதற்கும் ஒரு மணி நேரத்திற்கு முன் இந்த வாழைப்பழம் வேக வைத்த நீரை குடிக்க வேண்டும்.

நன்மைகள்

வாழைப்பழம் மற்றும் அதன் தோலில் பொட்டாசியம் மெக்னீசியம் மற்றும் கனிமச் சத்துக்கள் அதிகமாக நிறைந்துள்ளது. இரவில் இந்த வாழைப்பழ டீயை குடித்தால், மனதிற்கு அமைதி நிலை கிடைப்பதுடன், நல்ல உறக்கத்தையும் ஏற்படுத்தும்.

PREV
click me!

Recommended Stories

இனி, மருத்துவம் படிப்பது வேஸ்ட்..! நொறுங்கும் மாணவர்களின் கனவு... அதிர்ச்சி கிளப்பும் எலான் மஸ்க்..!
மைதா இல்லா ராகி சாக்லேட் கேக் | Protein Rich Healthy Cake