உங்களுக்குத் தெரியுமா? ஆரோக்கியமற்ற பற்கள் புற்றுநோயை உண்டாக்கும்…

 
Published : Mar 14, 2017, 02:26 PM ISTUpdated : Sep 19, 2018, 02:42 AM IST
உங்களுக்குத் தெரியுமா? ஆரோக்கியமற்ற பற்கள் புற்றுநோயை உண்டாக்கும்…

சுருக்கம்

Did you know Unhealthy teeth can cause cancer

பல் ஆரோக்கியம் நம் தோற்றத்தை அழகாக்குவதோடு உங்கள் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தின் மீதும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

மோசமான பல் ஆரோக்கியத்தை கொண்ட பலருக்கும் பல் இழப்பு அல்லது சொத்தைப் பல் பிரச்சனைகள் ஏற்படும்.

வாயில் உள்ள பாக்டீரியா சர்க்கரை நோய் மற்றும் சுவாச பிரச்சனைகள் போன்ற பல தீவிர உடல்நல பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

இன்று, வாய்க்கும் உடலுக்கும் இடையேயான தொடர்பினால் ஏற்படக்கூடிய சில உடல்நல பிரச்சனைகள்:

1.. பெரிடோன்ட்டல் நோய் மோசமான பல் ஆரோக்கியம், பெரிடோன்ட்டல் என்ற ஈறு வியாதியை ஏற்படுத்தும். இது ஈறு அழற்சியாக தொடங்கும். இதனால் ஈறுகளில் சிவத்தல், வீக்கம் மற்றும் இரத்தப்போக்கு ஏற்படும். இதற்கு சிகிச்சை எடுக்கவில்லை என்றால் இப்பிரச்சனை தீவரமடையும். இதனால் ஈறு திசுக்களும், பற்களை தாங்கும் எலும்புகளும் நிலைகுலையும்.

2.. எண்டோகார்டிடிஸ் என்பது இதய உட்சவ்வு அழற்சியாகும். வாயில் உள்ள பாக்டீரியாவால் இது ஏற்படும். சிறிய ஈறு வியாதி அல்லது ஈறுகளில் ஏற்பட்டுள்ள வெட்டினால், இந்த பாக்டீரியா இரத்த ஓட்டத்தில் நுழையும் .

3.. இதயகுழலிய நோய் இதற்கு சிகிச்சை அளிக்கவில்லை என்றால், பெரிடோன்டிட்டிஸ் பிரச்சனையை ஏற்படுத்தும் பாக்டீரியா வாயில் இருப்பதால், பல்வேறு வகையான இதய நோய்கள் ஏற்படும். தமனிகள் அடைப்பு மற்றும் வாதம் ஆகியவைகள் இதில் அடக்கம்.

ஞாபக மறதி மோசமான பல் ஆரோக்கியம் இதயத்தை பாதிப்பதோடு மட்டுமல்லாது மூளையையும் தாக்கக்கூடும். மூளை தமனிகளின் சுருங்குதல் மற்றும் அடைத்தல், மோசமான பல் சுகாதாரத்தோடு தொடர்புடையது. மூளையின் தமனிகள் பாக்டீரியாவால் பாதிப்படையும் போது, அது ஞாபக மறதியை ஏற்படுத்தும்.

4.. சர்க்கரை நோய்க்கும் மோசமான பல் ஆரோக்கியத்திற்கும் வலுவான சம்பந்தம் உள்ளது. வாயில் ஏற்படும் எரிச்சல், இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தும் உடலின் வலிமையை வலுவிழக்க செய்யும். சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு சர்க்கரையை செயலாக்குவதில் பிரச்சனைகள் ஏற்படும். அதற்கு காரணம், சர்க்கரையை ஆற்றலாக மாற்றக்கூடிய ஹார்மோனான இன்சுலினின் குறைபாடு.

5.. யூரோப்பியன் சொசைட்டி ஆஃப் ஹ்யூமன் ரீப்ரொடக்ஷன் அண்ட் எம்ப்ரியாலாஜி நடத்திய சமீபத்திய ஆய்வின் படி, மோசமான பல் ஆரோக்கியம் அல்லது ஈறு வியாதிகளை கொண்ட பெண்கள் கர்ப்பம் தரிக்க கால தாமதமாகும். நன்றாக பல் துலக்குவதன் மூலம் ஈறு வியாதிகளை தடுக்கலாம்.

6.. ஈறு பிரச்சனைகளை கொண்ட பெண்களுக்கு கர்ப்பம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் அதிகமாக ஏற்படும். குழந்தையின் குறைவான உடல் எடை மற்றும் குறைப்பிரசவம் போன்றவைகள் எல்லாம் இதனால் ஏற்படக் கூடிய சிக்கல்களாகும். அதற்கு காரணம், பிரசவ வலியை தூண்டும் ரசாயனம் வாய் பாக்டீரியாவில் உள்ளது. ஈறு பிரச்சனை அதிகரிக்கையில், ரசாயனத்தின் அளவும் அதிகரிக்கும். அதனால் கர்ப்பம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படும்.

7.. மோசமான பல் ஆரோக்கியத்திற்கும் சில புற்றுநோய் வகைகளுக்கும் தொடர்பு இருப்பது சமீபத்திய ஆய்வு ஒன்றின் மூலம் தெரிய வந்துள்ளது. தலை, கழுத்து, உணவுக்குழாய் மற்றும் நுரையீரல் புற்றுநோய்கள் இதில் அடக்கம். மோசமான பல் துலக்கும் பழக்கம், பல் சொத்தை மற்றும் பெரிடோன்ட்டல் நோய் ஆகியவற்றால் இவ்வகையான புற்றுநோய்கள் ஏற்படும் இடர்பாடு அதிகமாக உள்ளது.

8.. நுரையீரல் பிரச்சனைகள் பெரிடோன்ட்டல் நோய் நிமோனியாவை உண்டாக்கும். அதே போல் நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோயை உண்டாக்கும். ஏனெனில் நுரையீரலில் உள்ள பாக்டீரியாவின் அளவு அதிகரித்து விடும்.

PREV
click me!

Recommended Stories

Garlic with Jaggery : பூண்டு + வெல்லம்.. வெறும் வயிற்றில் சாப்பிட்டால் 'உடலில்' இந்த அதிசயங்கள் நடக்கும்!
Lip Balm : லிப் பாம் போடுறவங்க கண்டிப்பா 'இந்த' விஷயத்தை கவனிக்கனும்! அடுத்த முறை 'அந்த' தப்பை பண்ணாதீங்க