உங்களுக்குத் தெரியுமா? எடையைக் குறைக்க நுங்கு நல்ல மருந்து..

Asianet News Tamil  
Published : Mar 23, 2017, 01:22 PM ISTUpdated : Sep 19, 2018, 03:03 AM IST
உங்களுக்குத் தெரியுமா? எடையைக் குறைக்க நுங்கு நல்ல மருந்து..

சுருக்கம்

Did you know Jelly good medicine to lose weight

நுங்கு:

தாகத்தை தணிக்கும். மோகத்தை தூண்டும்.

உடலும் புத்துணர்ச்சி பெறும்.

நுங்கு நீர் பசியை தூண்டும்.

கோடை காலத்தில் மனிதர்களைப் பாதுகாக்க இயற்கை அளித்த வரப்பிரசாதங்களில் நுங்கும் ஒன்று.

எவ்வளவு தண்ணீர் குடித்தாலும் அடங்காத தாகம் நுங்கு சாப்பிட்டால் அடங்கும்.

நுங்கில் வைட்டமின் பி, சி மற்றும் இரும்புச்சத்து, கால்சியம், துத்தநாகம், சோடியம், மக்னீசியம், பொட்டாசியம், தயாமின், புரத சத்துகள் அதிகம் உள்ளது.

உடல் எடையை குறைக்க வேண்டும் என்போருக்கு நுங்கு சிறந்த மருந்து. உடலிலுள்ள கொழுப்பைக் கட்டுப்படுத்துவதோடு, எடையைக் குறைக்கும் தன்மையும் கொண்டது.

மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப் போக்கு இரண்டுக்குமே சிறந்த மருந்தாக உள்ளது.

ரத்தசோகை உள்ளவர்கள் நுங்கை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் குணமாகும்.

கொளுத்தும் வெயிலைத் தாங்க முடியாதோருக்கு அம்மைநோய் தாக்குதல் ஏற்படுவது வழக்கம். நுங்கை சாப்பிட்டால் அம்மை வராமல் தடுக்கலாம்.

மேலும், ஆண்மையைத் தூண்டக் கூடியதாகவும், பெண்களுக்கு வெள்ளைப்படுதலுக்கு சிறந்த மருந்தாகவும் உள்ளது.

சிறுநீர் கடுப்பு, சிறுநீர் எரிச்சலைத் தணிப்பதோடு, உடலில் உள்ள ஏழு தாதுக்களில் ஏற்படக்கூடிய சூட்டைக் குறைத்து குளிர்ச்சியை அளிக்கும்.

PREV
click me!

Recommended Stories

இனி, மருத்துவம் படிப்பது வேஸ்ட்..! நொறுங்கும் மாணவர்களின் கனவு... அதிர்ச்சி கிளப்பும் எலான் மஸ்க்..!
மைதா இல்லா ராகி சாக்லேட் கேக் | Protein Rich Healthy Cake