புகைப்பிடித்தலை நிறுத்த முடியலையா? வாழைப்பழம் சாப்பிடுங்க…

Asianet News Tamil  
Published : Aug 18, 2017, 01:03 PM ISTUpdated : Sep 19, 2018, 01:02 AM IST
புகைப்பிடித்தலை நிறுத்த முடியலையா? வாழைப்பழம் சாப்பிடுங்க…

சுருக்கம்

Can not stop smoking? Eat bananas ...

வாழைப்பழம் உடலுக்கு நல்லது என்ற பொதுவான கருத்தாக இருக்கிறது. ஆனால், காலை பசியாறலுக்கு ஒரு மனிதனுக்குத் தேவையான அனைத்துச் சத்துக்களையும் தந்துவிடக்கூடிய சக்தி வாழைப்பழத்துக்கு உண்டு.

வாழைப்பழத்தில் வைட்டமின் `ஏ’, வைட்டமின் `பி’ 6, வைட்டமின் `சி’, மக்னீசியம் மற்றும் பொட்டாசியம் போன்றவை அதிகம் நிறைந்துள்ளது. வயிற்றில் ஏற்படும் பல நோய்களைப் போக்கி, உடலை ஆரோக்கியத்துடன் வைத்துக்கொள்ள உதவுகிறது வாழைப்பழம்.

வாழைப்பழம் மட்டுமல்ல, வாழை மரத்தின் ஒவ்வொரு பகுதியும் பல வகைகளில் நமக்கு நன்மை செய்கிறது.

ஒவ்வாமை

அலர்ஜியால் அவஸ்தைப்படுபவர்களுக்கு வாழைப்பழம் மிகவும் நல்லது. ஏனெனில் இதில் தீங்கற்ற அமினோ ஆசிட்டுகள் நிறைந்திருப்பதால், இது அலர்ஜி ஏற்படுவதைத் தடுக்கும்.

ரத்த சோகை

அதிகப்படியான இரும்புச்சத்து வாழைப்பழத்தில் இருப்பதால், இதனை சாப்பிட்டால், ரத்த சோகை நீங்கி, ரத்தணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். வாழைப்பழத்தில் உள்ள ஃபுருக்டோஸ், குளுக்கோஸ், மற்றும் சுக்ரோஸ், உடலுக்கு ஆற்றலை உடனடியாகக் கொடுக்கும். அதனால் தான் விளையாட்டு வீரர்களை அடிக்கடி வாழைப்பழம் சாப்பிட சொல்கிறார்கள்.

மலச்சிக்கல்

மலச்சிக்கலால் பாதிக்கப்பட்டவர்கள், வாழைப்பழத்தை சாப்பிட்டால் குடலியக்கமானது சீராக இயங்கி, மலச்சிக்கல் பிரச்சனை எளிதில் நீங்கிவிடும்.

வயிற்றுக்கடுப்பு

மசித்த வாழைப்பழத்தில் சிறிது உப்பு சேர்த்து பிசைந்து சாப்பிட்டால், வயிற்றுக்கடுப்பிற்கு நல்ல நிவாரணம் கிடைக்கும்.

தலை பாரம்

மது அருந்தியதால் ஏற்படும், தலைபாரத்தை போக்குவதற்கு வாழைப்பழ மில்க் ஷேக் சாப்பிடலாம். இதனால் வாழைப்பழம் மற்றும் பாலானது உடலை அமைதிப்படுத்தி, உடலை சீராக இயங்க வைக்கும்.

புகைப்பிடித்தலை நிறுத்த

வாழைப்பழத்தில் உள்ள வைட்டமின் ஏ1, பி6, பி12, சி, மக்னீசியம் மற்றும் பொட்டாசியம், போன்ற ஊட்டச்சத்துக்கள் உடலில் உள்ள நிக்கோட்டினை வெளியேற்ற உதவுவதோடு, புகைப்பிடித்தலை நிறுத்தவும் உதவியாக இருக்கும்.

மன அழுத்தம்

வாழைப்பழத்தில் உள்ள ட்ரிப்டோஃபேன் என்னும் அமினோ ஆசிட், மூளையில் உற்பத்தியாகும் செரோடினின் அளவை அதிகரித்து, மன அழுத்தத்தைப் போக்கி, மனதை புத்துணர்ச்சியுடன் வைத்துக் கொள்ள உதவியாக இருக்கும்.

குடல் கோளாறு

தினமும் ஒரு வாழைப்பழத்தை சாப்பிட்டு வந்தால், குடல் கோளாறான நாள்பட்ட அல்சர் பிரச்சனை எளிதில் நீங்கிவிடும். அதிலும் நன்கு கனிந்த பழத்தை சாப்பிட்டால், புண்ணுடன் கூடிய குடல் அலற்சியையும் குணமாக்கும். மேலும் செரிமானமும் சீரான நடைபெறும்.

மூளை செயல்பாடு

பொட்டாசியம் அதிகம் உள்ள வாழைப்பழத்தை சாப்பிட்டால், மூளையின் செயல்பாடானது அதிகரிக்கும். எனவே தினமும் காலையில் எழுந்து ஒரு வாழைப்பழத்தை சாப்பிட்டு, அன்றைய நாளை தொடங்குங்கள்.

சிறுநீரக பிரச்சனை

வாழைப் பழத்தில் உள்ள குறைந்த அளவு புரோட்டீன் மற்றும் உப்பு மற்றும் அதிக அளவில் உள்ள கார்போஹைட்ரேட் சிறுநீரகத்தில் ஏற்படும் தீவிர பிரச்சனைகளை போக்கும்.

PREV
click me!

Recommended Stories

இனி, மருத்துவம் படிப்பது வேஸ்ட்..! நொறுங்கும் மாணவர்களின் கனவு... அதிர்ச்சி கிளப்பும் எலான் மஸ்க்..!
மைதா இல்லா ராகி சாக்லேட் கேக் | Protein Rich Healthy Cake