பூஸ்ட், ஹார்லிக்ஸ் விட மிகச் சிறந்த ஊட்டச்சத்து மருந்து “அருகம்புல்”…

 
Published : Feb 13, 2017, 02:14 PM ISTUpdated : Sep 19, 2018, 01:05 AM IST
பூஸ்ட், ஹார்லிக்ஸ் விட மிகச் சிறந்த ஊட்டச்சத்து மருந்து “அருகம்புல்”…

சுருக்கம்

அருகம் புல்லை பூஜை அறையில் வைத்து பயன்படுத்துவதுண்டு ஆனால் அருகம்புல்லின் மருத்துவப் பெருமை தெரிந்தவர்கள் நம்மில் எத்தனை பேர் உள்ளனர்.

நமது உடலில் ஊட்டச்சத்து பெருகவேண்டும் என்பதற்காக ஹார்லிக்ஸ் ஓவல்டின் போன்ற பல வகையான பானங்களை சாப்பிடுகிறோம்.

ஆனால் அருகம்புல்லே அற்புதமான ஊட்டச்சத்து மூலிகை என்பது நம்மில் பலருக்க தெரிந்திருக்காது.

நல்ல தளிர் அருகம்புல்லை சேகரித்து நீரில் கழுகி நன்கு அரைத்து பசும்பாலுடன் சுண்டக்காய்ச்சி நாள்தோறும் இரவில் படுக்கச் செல்லும்முன் சாப்பிட்டு வந்தால் பலவீனமடைந்த உடல் தேறி நல்ல பலம் பெற்றுவிடும்.

வளர்ந்து வரும் குழந்தைகள் எளிதாக ஊட்டச்சத்து பெற இதே முறையை கையாளலாம்.

அருகம் புல்லை நீரிலிட்டு நன்கு காய்ச்சி அந்த நீரை பதமான சூட்டில் குடித்து வந்தால் இதய நோய்க்கு இதமளிக்கும்.

தீடீரென ஏற்படும் வெட்டு காயம் போன்ற ரண காயங்களுக்கு அரிவாள் மூக்கு என்று சொல்லப்படும் பச்சிலையையும் அருகம்புல்லையும் சம அளவாக எடுத்து அரைத்துக்கட்டினால் உதிரப்பெருக்கு உடனடியாக நின்றுவிடும். காயமும் வெகு விரைவில் ஆறிவிடும். அருகம்புல்லையும் தேங்காய் எண்ணையையும் சம அளவு எடுத்துக் கொண்டு அதை உடலில் தேய்த்து அரைமணி நேரம் ஊறவிடவும்.

அருகம்புல்லை பொடியாக்கி கடலை மாவுடன் தேய்த்துக் குளித்தால் உடல் கண்ணாடி போல் ஜொலிக்கும்.

நரம்புத் தளர்ச்சி, மாதவிடாய்க் காலத்தில் பெண்களுக்கு உண்டாகும் பிரச்னைகளுக்கு அருகம்புல்சாறு சிறந்த தீர்வாக உள்ளது.

வாயுத் தொல்லை உள்ளவர்கள் அருகம்புல் சாறு அருந்தி வர, அதிலிருந்து விடுபடலாம்.

உடல் சூட்டையும் இது தணிக்கிறது.

உடல் ரத்த சுத்திகரிப்புக்கு அருகம்புல் சாறு பேருதவியாக உள்ளது.

ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களை அதிகரிப்பதுடன், ரத்தச் சோகை, ரத்த அழுத்தத்தையும் அது சீராக்குகிறது.

அருகம்புல் சாற்றில் வைட்டமின் 'ஏ' சத்து உள்ளது. இதை உட்கொண்டால் உடல் புத்துணர்வு பெறுகிறது.

குழந்தைகளுக்கு பாலில் கலந்து கொடுக்கலாம். யுனானி மருத்துவத்தில் அருகம்புல் மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது.

இதை முறையாக பதப்படுத்தி கிட்னி ஃபெயிலியர், ஆஸ்துமா போன்ற நோய்களுக்கு மருந்தாகத் தரப்படுகிறது.

PREV
click me!

Recommended Stories

Belly Fat Burning Exercises : வீட்டில் செய்யும் இந்த '4' எளிய பயிற்சிகள் போதும்! கொழு கொழுனு தொங்கும் தொப்பையை அப்படியே குறைக்கும்
Healthy Lifestyle : 30 வயசான பிறகு இந்த '5' விஷயங்களை தெரியாம கூட பண்ணாதீங்க.. ஆரோக்கியத்திற்கு எதிரி