பிரகோலியின் மருத்துவ குணங்கள் இதோ…

Asianet News Tamil  
Published : Mar 01, 2017, 01:40 PM ISTUpdated : Sep 19, 2018, 02:07 AM IST
பிரகோலியின் மருத்துவ குணங்கள் இதோ…

சுருக்கம்

Behold the medicinal properties Broccoli

பிரக்கோலி என்கிற காயைப் பற்றி பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. வெளிநாட்டு வரவான இந்தக் காய் நம்மூருக்கு அறிமுகமாகி பல ஆண்டுகள் ஆனாலும், அதன் பயன்பாடு இன்னும் பரவலாகவில்லை. நட்சத்திர ஓட்டல்களில் மட்டுமே சமைத்துப் பரிமாறப்படுகிற காஸ்ட்லியான காயாக இருப்பதே காரணம்.

சமீப காலங்களில் பிரக்கோலியின் பயன்பாடு சாமானிய மக்களுக்கும் ஓரளவுக்குத் தெரிய ஆரம்பித்திருக்கிறது. பிரக்கோலி என்பது ஒரு வகை காய் என்ற அளவில் மட்டுமே நிற்கிறதே தவிர, அதை எப்படி சமைப்பது என்கிற தகவல்கள் பலருக்கும் புரியாத புதிர்தான்!

‘‘பிரக்கோலி இத்தாலி நாட்டை சேர்ந்த காய். இது முதலில் அந்த நாட்டில்தான் பயன்படுத்தப்பட்டது. இந்தக் காயைப் பற்றி அவ்வளவாக யாருக்கும் தெரியாது.

அறிமுகம் இல்லாத இந்தக் காயில் நிறைய ஆரோக்கியங்கள் உள்ளன. இது ஊட்டச்சத்துகள் நிறைந்த காய். வைட்டமின் சி, நார்ச்சத்து, இரும்புச்சத்து, வைட்டமின் ஏ, பொட்டாசியம், கால்சியம், மக்னீசியம், கரோடின் மற்றும் பி வைட்டமின்கள் நிறைந்தது.

இது நீரிழிவு, புற்றுநோய், இதயநோய், எலும்பு சம்பந்தப்பட்ட நோய்கள் மற்றும் ரத்த அழுத்தம் போன்றவற்றை வர விடாமல் தடுப்பதில் முக்கிய பங்களிக்கிறது.

பிரக்கோலியை வேகவைத்தோ அல்லது பச்சையாகவோ உண்ணலாம். இதனை நீங்கள் குழம்பாகவோ, பொரியலாகவோ செய்து உண்ணலாம். சூப், சாலட் ஆகியவற்றில் சேர்த்து உண்ணலாம். பிரக்கோலி, ருசியான சுவையும் மொறுமொறுப்புத் தன்மையும் கொண்டது.

பிரக்கோலியின் ஆரோக்கிய நலன்கள் எலும்பு சம்பந்தப்பட்ட நோய்களை தடுக்க பிரக்கோலியில் Sulfophane என்ற ஒரு கலவை உள்ளது. இது, எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்னைகளில் இருந்து பாதுகாக்கும். கால்சியம் மற்றும் வைட்டமின் கே அளவு பிரக்கோலியில் அதிகம் உள்ளது.

இந்த இரண்டு ஊட்டச்சத்துகளும் எலும்பின் ஆரோக்கியத்திற்கு முக்கியமானது. இது ஆஸ்டியோபொரோசிஸ் (Osteoporosis) என்னும் நோய் வராமல் தடுக்க உதவும். பிரக்கோலி வைட்டமின் டி குறைப்பாட்டை தீர்க்க உதவும். இதில் அதிக அளவில் உள்ள வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் கே, வைட்டமின் டியின் வளர்சிதையை சமநிலையில் வைக்க உதவுகிறது. வைட்டமின் டி மாத்திரை எடுத்துக்கொள்பவர்களுக்கு பிரக்கோலி சரியான மாற்று.

புற்று நோயை தடுக்க;

பிரக்கோலி புற்று நோயைத் தடுக்கும் பண்பு நிறைந்தது. இதற்குக் காரணம் இதில் உள்ள Glucoraphanin என்னும் பொருள். இந்தக் கூறு H.pylori என்னும் கிருமியை உடலில் இருந்து வெளியேற்றும் திறன் கொண்டது. இந்தக் கிருமி வயிற்றில் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடியது.

பிரக்கோலியில் Indole 3 carbinol) என்னும் என்சைம் உள்ளது. அது ஆன்டிஆக்ஸிடன்ட்டுகள் திறன் கொண்டது. இது புற்றுநோய்க்கு மட்டும் உதவாமல், கல்லீரல் செயல் திறனை அதிகரிக்கிறது. இது போன்ற பண்புகள் உள்ளதால் இது ஒரு தனித்தன்மை வாய்ந்த காயாகும்.

கொழுப்பை (Cholesterol) குறைக்க;

பிரக்கோலி நார்ச்சத்து நிறைந்தது. எனவே அது ரத்தத்தில் உள்ள கொழுப்பை குறைக்கும் திறன் கொண்டது. பிரக்கோலியை வேக வைத்து உண்டால் அது உடலுக்கு மிகவும் நல்லது. பிரக்கோலியை ஆவியில் சமைத்தால் அதில் உள்ள நார்ச்சத்து செரிமான பித்த அமிலங்கள் இணைகின்றன. இந்த இணைப்பினால் பித்த அமிலங்கள் வெளியேற்றப்பட்டு, கொழுப்பைக் குறைக்க உதவுகிறது.

ஆன்ட்டிஆக்ஸிடன்ட் திறன்;

பிரக்கோலியில் மற்ற காய்களைக் (Cabbage, Cauliflower) காட்டிலும் வைட்டமின்கள் மற்றும் ஃபிளாவனாய்டுகள் (Flavonoids) நிறைந்து உள்ளன. இதில் Carotene, Lutein, Zeaxanthin ஆகிய சக்திவாய்ந்த ஆன்டிஆக்ஸிடன்ட்டுகள் உள்ளன. இதில் உள்ள தாவர ஊட்டச்சத்துகள் (Phytonutrients) நோய் எதிர்ப்பு அமைப்புக்கு நல்லது.

இதய ஆரோக்கியத்துக்கு;

Sulforaphane என்னும் பொருள் பிரக்கோலி யில் உள்ளது. இது உடலில் எந்த சேதமும் ஏற்படாமல் பாதுகாக்கும். இது ரத்த நாளங்களை பாதுகாத்து இதய நோய் வராமல் தடுக்கிறது. பிரக்கொலி ஒரு Goitrogenic உணவு.

தைராய்டுக்கு மிக மோசமான எதிரி:

தைராய்டு உருவாக வழிவகுக்கும் எந்த உணவும் goitrogenic உணவு என்று அழைக்கப்படுகிறது. Goitrogenic உணவுகள் தைராய்டு வீக்க நோய்க்கு காரணியாக இருக்கும் Goitrogen என்னும் கலவையைக் கொண்டிருக்கும்.

Goitrogens சில உணவுகளில் இயற்கையாக இருக்கும் அல்லது மருந்துகள் உட்செலுத்தப்பட்டிருக்கும். இது தைராய்டு சுரப்பியின் செயல்பாட்டில் தலையிடும். அது தைராய்டு சுரப்பி அல்லது தைராய்டு ஹார்மோன் உற்பத்தியின் போது அயோடின் சேர்க்கும். அது செயல்பட இது ஆன்டிபாடிகளை தூண்டுகிறது.

இந்த நிலையில் தைராய்டு சுரப்பி தைராய்டு ஹார்மோனை, போதுமான அளவு உற்பத்தி செய்ய முடியாது. தைராய்டு பிரச்னை உள்ளவர்கள் தைராய்டு ஹார்மோனை போதுமான அளவுக்கு உற்பத்தி செய்ய முடியாது.

இந்த நிலையில் தைராய்டு சுரப்பி அதில் உள்ள அணுக்களை பெருக்கச் செய்யும். இதனால் வீக்கம் ஏற்படும். இதுவே தைராய்டு உருவாக்கத்துக்கு வழி வகுக்கும்.

பிராக்கோலி தேர்ந்தெடுக்கும் முறை…

இதழ்கள் நன்றாகவும் உறுதியாகவும் இருக்க வேண்டும். பிரக்கோலியின் நிறம் முழுவதும் ஒரே மாதிரி சமமாக இருக்க வேண்டும். அது பழுப்படைந்து இருக்கக் கூடாது.

பிரக்கோலி இதழின் நடுவில் எந்த ஒரு மஞ்சள் அல்லது பழுத்த பூ போன்ற தோற்றம் இருக்கக்கூடாது. அதன் தண்டு எந்தப் புள்ளிகளும் இல்லாமல் உறுதியாக இருக்க வேண்டும். ஒரு வேளை அதில் இலைகள் இருந்தால் அவை பளிச் என இருக்க வேண்டும்.

PREV
click me!

Recommended Stories

இதய நோயாளிகளே... வாழைப்பழத்தை இப்படி சாப்பிட்டால் தான் முழு பலன் கிடைக்கும்!
Healthy Ragi Hide & Seek Cookies | No Maida | No Baking Powder | No Soda