
இதய நோயால் இறப்பவர்களின் எண்ணிக்கை, இந்தியாவில்தான் மிக அதிகம் என்கிறது, உலக சுகாதார மைய அறிக்கை. ஆனால் இது பற்றிய விழிப்புணர்வோ, அக்கறையோ இன்னும் முழுமையாக யாருக்கும் இல்லை.
இந்தியாவில் மட்டுமே, 50 வயதுக்குள் 35 சதவிகிதம் பேர் இதய நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்கின்றனர் மருத்துவர்கள்.
வந்த பின்னர் அவதிப்படுவதைவிட, வருவதற்கு முன்னரே காத்துக்கொள்வது நல்லது,
தூங்கும்போது பிரச்சனைகளைப் பற்றி நினைக்கக் கூடாது. அது இரவு தூக்கத்தைப் பாதிப்பதுடன், மனதளவில் நமக்கும் தூக்கத்துக்குமான இடைவெளியை பெரிதுபடுத்திவிடும்.
உணவு உண்ட பின், உடனே படுக்கைக்குச் செல்வதைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். சராசரியாக தினமும் எட்டு மணி நேர தூக்கம் மிக அவசியம்.
ஆரோக்கியமான உணவுப்பழக்கம், புகை, மது தவிர்க்க வேண்டும், இவற்றுடன் தூக்க நேரத்தையும் சரியாக பின்பற்றினால், இதய நோய், 90 சதவிகிதம் நெருங்க வாய்ப்பே இல்லை.
சிரிப்புக்கும் இதயத்துக்கும் மறைமுகமான, நெருங்கிய தொடர்புண்டு. ரத்தக்குழாயில் உள்ள கொழுப்புக்கட்டி வெடித்து, ரத்தம் உறைந்து ரத்தக்குழாயில் அடைப்பை ஏற்படுத்திவிடும்.
இதயத்துக்குச் செல்லும் ரத்தம் குறையும்போது மாரடைப்பு ஏற்படும். மனம்விட்டுச் சிரிக்கும் போது, நம் உடலில் நன்மை பயக்கும் சில ஹார்மோன்கள் சுரக்கும். இந்த ஹார்மோன்கள், ரத்தக்குழாய்களில் படிந்துள்ள கொழுப்புக்கட்டிகளை வெடிக்க விடாமல் செய்துவிடும். இனி வாய்விட்டுச் சிரிக்கலாம்.
இயந்திர மயமான உலகில் கால்களுக்கு, வேலை கொடுப்பதை மறந்து விட்டோம்.
காலையில் எழுந்தவுடன், அரை மணி நேரம் நடைப்பயிற்சி மேற்கொள்ளும்போது, உடலில் ரத்த ஓட்டம் சீராக இருக்கும். ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவும் குறையும்.
உணவுக்குப் பின் நடைப்பயிற்சி செய்வதை, கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். உலகிலேயே இந்தியர்கள்தான் சுவைக்கு, முக்கியம் தருவதில் முன்னணியில் இருக்கின்றனர்.
பிடிக்காத உணவை ஒதுக்கியும், பிடித்ததை அதிகமாக சாப்பிட்டும், அவதிப்படும் பழக்கத்துக்கு நாம் அடிமையாகி விட்டோம். இப்பழக்கத்தை தவிர்ப்பது நல்லது.