
பெண் கருத்தரித்து முடிந்து தாயாகிவிட்டோம் என்பதை உறுதி செய்துகொள்ளப் போகும் முன்பே கருவின் மூளையானது உருவாக ஆரம்பித்துவிடும். இது மிகவும் ஆச்சர்யமான விஷயம் ஆகும். இதன் மூலம் குழந்தை உருவாவதில் மூளையின் முக்கியத்துவம் என்ன என்பதை நன்கு உணரலாம்.
இந்த கால கட்டத்தில் ஃபோலிக் ஆசிட் அமிலம் மிகவும் தேவைப்படும். எனவே சீரான மூளை வளர்ச்சிக்கு ஃபோலிக் அமிலம் குறைவில்லாமல் எடுத்துக் கொள்வது அவசியம். ஃபோலிக் அமிலத்தின் பற்றாக்குறை இருக்கும் போது மூளையின் வளர்ச்சியில் குறைபாடு ஏற்படலாம். எனவே தாய் இதை மனதில் கொண்டு அதற்கேற்றவாறு உணாவு எடுத்துக் கொள்ள வேண்டும்.
ஃபோலிக் அமிலம் என்பது ஏதோ புதிதான பொருள் அல்ல. அது வைட்டமின் b9. இந்த வைட்டமின் b9 ஆனது, சிலவகை பருப்புகள், கீரைகள், ஆரஞ்சு பழம் போன்றவற்றில் இருக்கிறது.
இந்த ஃபோலிக் அமில பற்றாக்குறை குழந்தைகளுக்கு ஏற்படும்போது அதன் தண்டுவடம் பாதிக்கப்படுகிறது. ஃபோலிக் அமிலம் குறையும் போது மூளையைச் சுற்றி உள்ள செரிபுரோ ஸ்பைனல் திரவம் அதாவது மூளையை பாதுகாக்கக் கூடியது. ரத்தத்தில் கலப்பது குறைந்து விடுகிறது. இதனால் மூளையில் உள்ள செரிபுரோ ஸ்பைனல் திரவத்தின் அளவு அதிகமாகிறது. இதனால் மூளை செல்கள் பாதிக்கப்படுகின்றன.
கர்ப்ப காலத்தில் முதல் மூன்று மாதங்களில் ஒரு நாளைக்கு குறைந்தது 5. மி.கி அளவு ஃபோலிக் அமிலம்கட்டாயம் எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த அளவானது ஒருவருக்கு ஒருவர் வேறுபடுகிறது. பரம்பரை நோய் மற்றும் நீரிழிவு பாதிப்பு உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனையின் படி இந்த ஃபோலிக் அமிலத்தை எடுத்துக் கொள்ள வேண்டும்.