தமிழர்கள் ஐந்து வகையான நில அமைப்பில் பரந்து வாழ்ந்திருந்தனர். வெவ்வேறான நில அமைப்பை மட்டுமல்ல வெவ்வெறு உணவு பழக்க வழக்கங்களையும் கொண்டிருந்தனர்.
ஆதியில் வேட்டை சமூகமாய் புலால் உண்பவர்களாய் இருந்தாலும், காலப் போக்கில் சமவெளி மற்றும் ஆற்றங்கரை நாகரீகமாய் தலையெடுத்த பின்னர் காய், கனி மற்றும் கிழங்குகளை தங்கள் உணவில் அதிகம் இணைத்துக் கொண்டுள்ளனர்.
undefined
மலையும் மலை சார்ந்த குறிஞ்சி நிலத்தில் மூங்கிலரிசி, தினை, தேன் போன்றவை…
காடும் காடு சார்ந்த முல்லை நிலத்தில் சாமை, வரகு போன்றவை
வயலும் வயல் சார்ந்த மருத நிலத்தில் செந்நெல், வெண்நெல் போன்றவை
கடலும் கடல் சார்ந்த நெய்தல் பகுதியில் மீனும்
வறண்ட நிலமான பாலை நிலத்தில் குதிரை, ஒட்டகம் போன்ற மிருகங்களின் உணவுகளையும் முக்கியமான உணவாக கொண்டிருந்தனர்.