ஆண்கள் மட்டும் படிக்கவும் - முப்பது வயதை தொடும் ஆண்கள் இந்த விஷயங்களில் கவனிமாக இருக்கணும்...

 
Published : Jan 26, 2018, 01:28 PM ISTUpdated : Sep 19, 2018, 01:52 AM IST
ஆண்கள் மட்டும் படிக்கவும் - முப்பது வயதை தொடும் ஆண்கள் இந்த விஷயங்களில் கவனிமாக இருக்கணும்...

சுருக்கம்

After 30 men should be careful

 

முப்பது வயதை தொடும் ஆண்கள் கண்டிப்பாக கவனத்தில் கொள்ள வேண்டியவை:

முப்பது வயது என்பது ஆண்களுக்கு திருமணத்திற்கு மட்டுமல்ல, உடல்நலத்தின் மீதும் அதிக கவனம் செலுத்த வேண்டிய வயதாக இருக்கிறது. இதற்கு காரணம் நமது இன்றைய வாழ்வியல் முறை மாற்றம் தான். 

முன்பு நமது அப்பா, தாத்தா போன்றவர்கள் உடலுக்கு திறன் கொடுக்கும் வேலைகளை அதிகம் செய்து வந்தனர். ஆனால், இன்று நம்மில் 50% மேலானவர்கள் உட்கார்ந்த இடத்தில் கணினியின் முன்னே மணிக்கணக்கில் வேலை செய்து வருகிறோம். 

இதில் ஷிபிட் வேலைகள் வேறு, இவை ஒட்டுமொத்தமாக நமது உடல்நலத்திற்கு ஆப்பு வைக்கும் செயல்கள் ஆகும். எனவே, முப்பது வயதை தாண்டும் ஆண்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய ஆரோக்கிய குறிப்புகள் பற்றி தெரிந்துக் கொள்ள வேண்டியது அவசியம்

** உட்கார்ந்தே வேலை செய்யும் ஆண்களுக்கு முப்பது வயதை தாண்டும் போது எலும்புகளின் வலிமை குறைய ஆரம்பிக்கும். எனவே, தினமும் நடைபயிற்சி, மற்றும் போதிய அளவு உடலுக்கு வேலைகள் தர வேண்டியது அவசியம்.

** புரோஸ்டேட் என்பது ஆண்களின் இனப்பெருக்க பகுதியில் சுரக்கும் ஓர் சுரப்பி. முப்பது வயதுக்கு மேல் ஆண்களுக்கு புரோஸ்டேட் புற்றுநோய் ஏற்படும் அபாயம் இருக்கிறது என ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். எனவே, இது குறித்து கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.

** முப்பது வயதில் உடற்பயிற்சி செய்யவில்லை எனிலும் யோகாவில் ஈடுபடுவது உங்கள் உடலுக்கும் மனதுக்கும் நல்லது. குடும்ப வாழ்க்கையை வழிநடத்தி செல்லும் ஆண்களுக்கு மனநிலையில் சமநிலையின்மை ஏற்படலாம். யோகா உங்கள் மனதையும், உடலையும் ஒருமுகப்படுத்த உதவும்.

** ஆண்கள் முப்பதுகளில் உடல் பருமன் அதிகரிக்காமல் பார்த்துக் கொண்டால், உங்கள் வாழ்நாள் கடைசி வரை நீரிழிவு, மாரடைப்பு போன்ற பெரும்பாலான உடல்நலப் பிரச்சனைகள் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள முடியும்.

** உங்கள் உடலில் ஏதுனும் புதிய எதிர்மறை அறிகுறிகள் தென்பட்டால் மருத்துவரிடம் பரிசோதனை செய்துக் கொள்ளுங்கள். மருத்துவரை ஏமாற்றுகிறேன் என்று, உங்களை நீங்களே ஏமாற்றிக் கொள்ள வேண்டாம். இது பின்னாளில் அபாயமாக கூட அமையலாம்.

** உலக அளவில் 15 முதல் 35 வயதுக்குள்ளான ஆண்களுக்கு விதைப்பை புற்றுநோய் அதிகரித்து வருவதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். இதை ஆரம்பத்திலேயே கண்டறிந்தால், உடனே சரி செய்துவிட முடியும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். விதைப்பை வலி, கடினமாக உணர்வது, மார்பு வடிவத்தில் மாற்றம் ஏற்படுவது போன்றவை இதன் அறிகுறிகள் என கூறப்படுகிறது.

** நமது உணவு மற்றும் வேலை முறை மாற்றத்தினால் உடல் வலிமை மிகவும் பாதிக்கப்படுகிறது. எனவே, ஆண்கள் தங்கள் உடல் வலிமை குறித்து அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும். 

** முக்கியமாக, உணவு தேர்வு, வேலையின் போது அவ்வப்போது சிறு ஓய்வு மற்றும் இடைவேளை எடுத்துக் கொள்ளுங்கள். இது உங்கள் உடல் இலகுவாக இருக்க உதவும்.

PREV
click me!

Recommended Stories

மாதவிடாய் நேரத்தில் இந்த உணவுகளை சாப்பிட மறக்காதீங்க
Skin Damaging Foods : முகப்பருக்களே இல்லாத சருமத்திற்கு இதுதான் ஒரே வழி! இந்த 7 உணவுகளை உடனே நிறுத்துங்க