நரம்புகளில் ஏற்பட்டுள்ள வீக்கத்தை குணப்படுத்த அசோக மரம் உதவும். இன்னும் நிறைய டிப்ஸ் உள்ளே... 

 
Published : Jan 03, 2018, 01:26 PM ISTUpdated : Sep 19, 2018, 01:46 AM IST
நரம்புகளில் ஏற்பட்டுள்ள வீக்கத்தை குணப்படுத்த அசோக மரம் உதவும். இன்னும் நிறைய டிப்ஸ் உள்ளே... 

சுருக்கம்

Absolute tree helps to cure swelling in the veins. There are many more tips inside ...

அசோக மரம்

நீண்ட கூட்டிலைகளையும் செந்நிற மலர்களையும் உடைய செங்குத்தாக நெடிதுயர்ந்து வளரும் மரம். அழகு தரும் மரமாக வீட்டுத் தோட்டங்களில் வளர்ப்பதுண்டு. 

தமிழ்நாட்டில் மலைப்பாங்கான இடங்களில் காணப்படுகின்றன. பட்டை, பூ ஆகியவை மருத்துவப் பயனுடையவை. சதை, நரம்பு ஆகியவற்றின் வீக்கம் அகற்றியாகவும், கருப்பைக் குற்றங்களை நீங்கும் மருந்தாகவும் செயற்படும்.

1. 100 கிராம் மரப்பட்டையைச் சிதைத்து 400 மி.லி நீரிலிட்டு 100 மி.லி ஆகும் வரைக் காய்ச்சி வடிகட்டி 100 மி.லி பாலில் கலந்து நாள்தோறும் 2 அல்லது 3 வேளை பருகிவர பெரும்பாடு, வேட்டை, மூலம், கட்டிகள், வயிற்றுக்கடுப்பு ஆகியவை தீரும்.

2. மரப்பட்டை 40 கிராம், மாதுளம் வேர்ப்பட்டை 20 கிராம் பச்சையாகச் சிதைத்து அரை லிட்டர் நீரில் போட்டு 1 நாள் ஊறவைத்து வடிகட்டி 30 மி.லி அளவாக 3,4 வேளை தினமும் சாப்பிட்டு வர 1 வாரத்தில் எவ்வளவு நாளானா பெரும்படும் தீரும். காரம், புளி நீங்கலாகச் சாப்பிடவும்.

3. அசோகு பூ, மாம்பருப்பு சமனளவு போடி செய்து 3 சிட்டிகை, பாலில் கொள்ளச் சீதபேதி, இரத்தபேதி தீரும்.

4. அசோகுப் பட்டை, மாதுளம் வேர்ப்பட்டை, மாதுளம் பழ ஓடு சமனளவு பொடி செய்து 3 சிட்டிகை, காலை, மாலையாக வெந்நீரில் கொள்ளச் கருச்சிதைவு, வயிற்றுவலி, கர்ப்பச் சூலை, வாயுத் தொல்லை நீங்கும். 100, 120 நாள்கள் சாப்பிடப் பெண் மலடு தீரும்.

PREV
click me!

Recommended Stories

Pulicha Keerai : புளிச்ச கீரைக்கு இவ்வளவு 'சக்தி' இருக்கு!! ஆண்களுக்கு 'கண்டிப்பா' தேவை
உப்பு vs சர்க்கரை! தயிரில் எதை கலந்து சாப்பிட்டால் ஆரோக்கியத்திற்கு நல்லது?