நீரிழிவு பாதிப்பை வீட்டிலேயே குணப்படுத்த 10 எளிய உணவுகள்..!

 
Published : Nov 04, 2016, 04:52 AM ISTUpdated : Sep 19, 2018, 01:07 AM IST
நீரிழிவு பாதிப்பை வீட்டிலேயே குணப்படுத்த 10 எளிய உணவுகள்..!

சுருக்கம்

1. முருங்கைக்காய் கீரை..!
முருங்கைக்காய் கீரையில் உள்ள நார்ச் சத்து தெவிட்டான நிலையை அதிகரித்து உணவு உடைபடுவதை குறைக்கச் செய்யும். இதனால், ரத்தத்தில் சர்க்கரை அளவு குறையும்.

2. துளசி இலை
இரத்தத்தில் சர்க்கரை அளவை குறைக்க துளசி இலை உதவுகிறது. துளசி இலையில் விஷத் தன்மையுள்ள அழுத்தத்தை போக்கும் ஆற்றல் மிக்க ஆன்டி-ஆக்சிடன்ட்கள் உள்ளது. இவை சர்க்கரை நோயில் பல சிக்கல்களை நீக்குகிறது.

3. ஆளி விதைகள்
இரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் மற்றும் இன்சுலின் அளவை நிலைப்படுத்த ஆளி விதைகள் உதவும்.
ஆளி விதைகளை உட்கொண்டு வந்தால் உணவுக்கு விற்குப் பிற்பட்ட சர்க்கரை அளவு சுமார் 28% குறையும்.

4. இலவங்கப்பட்டை
உணவில் ஒரு கிராம் அளவில் இலவங்கப் பட்டையை 30 நாள்களுக்கு அதை உட்கொண்டு வந்தால், இரத்தத்தில் சர்க்கரை அளவு குறையும்.

5. கிரீன் டீ
கிரீன் டீ –ல் திடமான ஆன்டி - ஆக்சிடன்ட்கள் மற்றும் ஹைபோக்ளைசெமிக் தாக்கங்கள் இருக்கும்.
இரத்தத்தில் சர்க்கரை கட்டுப்பாடான அளவில் வெளியேற பாலிஃபீனால் உதவும்.

6. நாவல் பழ கொட்டை
நாவல் பழ கொட்டைகளின் பருப்பு நீரிழிவு பாதிப்பையை கட்டுப்படுத்தி இரத்தத்தில் சர்க்கரை அளவைக் குறைக்கும். நாவல் மர இலைகளை மென்று சாப்பிட்டாலும் இரத்ததில் சர்க்கரை அளவு குறையும்.
நாவல் பழ விதை நாவல் பழ விதைகளில் உள்ள க்ளுகோசைட், ஸ்டார்ச்சை சர்க்கரையாக மாற்றுவதை தடுக்கும். இது இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை குறைக்கும். மேலும் இன்சுலின் உயர்வை கட்டுப்பாட்டில் வைக்கும். மேலும் இருதயத்தை பாதுகாக்கும் குணங்களையும் இந்த பழம் கொண்டுள்ளது.

7. பாகற்காய்
இரத்தத்தில் சர்க்கரை அளவை குறைக்க உதவும் பையோ ரசாயனமான இன்சுலின்-பாலிபெப்டைட் பாகற்காயில் உள்ளது. பாகற்காயை குழம்பு, கூட்டு மற்றும் சூப்களில் பயன்படுத்தலாம். நீரிழிவு பாதிப்புக்கு சித்த மருந்து சாப்பிடுபவர்கள், பாகற்காய் தவிர்ப்பது நல்லது. அல்லது பாகற்காய் சாப்பிடும் அன்று சித்த மருந்தை தவிர்க்கலாம்.

8. வேப்பம் இலை
நீரிழிவு நோய்க்கான சிகிச்சைக்கு வேப்பம் இலை கொழுந்துகளை பயன்படுத்தலாம். அதிலிருந்து எடுக்கப்படும் சாற்றை தினமும் காலையில் வெறும் வயிற்றில் பருகினால் சர்க்கரை நோய் பாதிப்பு குறையும்.

9. கருப்பு சீரகம்
கருப்பு சீரகம் ரத்தத்தில் சர்க்கரை அளவை குறைக்க உதவுகிறது. சர்க்கரை நோய்க்கு சிகிச்சை அளிக்க இவற்றைப் பயன்படுத்தலாம்.

10. உடற்பயிற்சி
அடுத்து செலவு இல்லாத மருந்து உடற்பயிற்சி. இது உடல் எடையை குறைக்க உதவும். இதனால் உடல் பருமன் பிரச்னையும் நீங்கும். உடற்பயிற்சி என்பது இன்சுலின் உற்பத்தி திறனை அதிகரிக்கும். மேலும் சீரான முறையில் உடற்பயிற்சி செய்து வந்தால் ரத்தத்தில் கொலஸ்ட்ரால் அளவு குறையும். இரத்த அழுத்தம் கூட குறையும். சின்ன சின்ன உடற்பயிற்சி செய்தால் கூட நல்ல பயன் கிடைக்கும்.

மேலும் தியானம் மற்றும் யோகாசனம் செய்வதால் உடலில் இன்சுலின் எதிர்ப்பு குறையும். கார்டிசோல், அட்ரினாலின் மற்றும் நோராட்ரினலின் போன்ற சில மன அழுத்த ஹார்மோன்கள் இன்சுலின் மற்றும் குளுக்கோஸ் அளவுகளின் உற்பத்தியை தீவிரப்படுத்தும்.

ட்ரான்ஸ்சென்டென்ட்டல் தியான முறை மூலமாக நரம்பியல் ஹார்மோன்களை குறைத்தால், இரத்தத்தில் உள்ள இன்சுலின் மற்றும் குளுகோஸின் அளவு சம நிலையுடன் விளங்கும். மெட்டபாலிக் சிண்ட்ரோம் மற்றும் சர்க்கரை நோயை நடுநிலையாக்க இது உதவும்.

PREV
click me!

Recommended Stories

குளிர்கால சரும வறட்சிக்கு முற்றுப்புள்ளி
Skincare Routine : அழகின் உச்சத்தைத் தொட இந்த '6' பழக்கங்கள் போதும்; உங்களை பாக்குறவங்க அசந்துடுவாங்க!!