பருவநிலை மாற்றம் மற்றும் வரிகள் மட்டுமல்லாமல், பணவீக்கமும் காபி விலை உயர்வுக்கு முக்கிய காரணிகளில் ஒன்றாகும். தொழிலாளர் கூலி, உரங்கள் மற்றும் கடன் வாங்குவதற்கான செலவு அதிகரித்துள்ளதால், காபி உற்பத்தியின் ஒட்டுமொத்த செலவும் உயர்ந்துள்ளது. சர்வதேச காபி சந்தையில் ஏற்பட்டுள்ள இந்த நெருக்கடியான சூழ்நிலை, காபி விவசாயிகள், வணிகர்கள் மற்றும் நுகர்வோர் என அனைவரையும் பாதித்துள்ளது. விவசாயிகள் மகசூல் இழப்பால் பாதிக்கப்படுகின்றனர், வணிகர்கள் அதிக விலை கொடுத்து வாங்க வேண்டியுள்ளது, நுகர்வோர்கள் கூடுதல் விலை கொடுத்து காபி அருந்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.