டிரம்ப் - புடின் சந்திப்புக்கு சவுதி அரேபியாவைத் தேர்வு செய்திருப்பது ஏன்?

Published : Feb 19, 2025, 12:14 AM ISTUpdated : Feb 19, 2025, 08:32 AM IST

Trump-Putin meeting in Saudi Arabia: ரஷ்யா-உக்ரேன் போரை நிறுத்த டிரம்ப், புடினுடன் சவுதி அரேபியாவில் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். உக்ரேன் அதிபர் ஜெலன்ஸ்கிக்கு அழைப்பு இல்லாததால் உக்ரேன் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் சவுதி உறுப்பினராக இல்லாததும் சந்திப்புக்கு ஒரு காரணமாக பார்க்கப்படுகிறது.

PREV
17
டிரம்ப் - புடின் சந்திப்புக்கு சவுதி அரேபியாவைத் தேர்வு செய்திருப்பது ஏன்?
Trump-Putin meeting in Saudi Arabia

அமெரிக்க அதிபராக இரண்டாவது முறையாக பதவியேற்ற டொனால்டு டிரம்ப், ரஷ்யா - உக்ரேன் இடையேயான போரை நிறுத்துவதற்கு ரஷ்ய அதிபர் புடினுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த முன்வந்துள்ளார். சவுதி அரேபியாவில் டிரம்ப் - புடின் சந்திப்பு நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

27
Trump-Putin meeting in Saudi Arabia

இந்த அமைதிப் பேச்சுவார்த்தையில் சம்பந்தப்பட்ட உக்ரைன் நாட்டின் அதிபர் ஜெலன்ஸ்கிக்கு அழைப்புவிடுக்கப்படவில்லை என்பதால் அந்நாட்டு அரசு இந்தச் சந்திப்புக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் சந்திப்பை நடத்த இசைந்துள்ள சவுதி அரேபியா, ரஷ்யா - உக்ரைன் இடையே அமைதி நிலவ சாத்தியமான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளத் தயாராக இருப்பதாகக் கூறியுள்ளது.

37
Trump-Putin meeting in Saudi Arabia

டிரம்ப் - புடின் சந்திப்பைத் தங்கள் நாட்டில் சீனா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகியவையும் விருப்பம் தெரிவித்தன என்று கூறப்படுகிறது. ஆனால், சவுதி அரேபியாதான் ரஷ்யா, உக்ரைன்  இருநாடுகளுடனும் சுமூகமான உறவைக் கொண்டிருப்பதால் அதுவே சந்திப்பை நடத்த சரியான தேர்வாக இருக்கும் என்று சர்வதேச அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

47
Trump-Putin meeting in Saudi Arabia

பொதுவாக இதுபோன்ற விவகாரங்களில் இருநாட்டுத் தலைவர்களின் சந்திப்பு சுவிட்சர்லாந்து போன்ற நடுநிலையான நாடுகளில்தான் நடைபெறும். ஆனால், ரஷ்யா சுவிட்சர்லாந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளுடன் நல்லுறவைப் பேணவில்லை என்பதால் வேறொரு இடத்தில் சந்திப்பை நடத்தவேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது எனவும் சொல்லப்படுகிறது.

57
Trump-Putin meeting in Saudi Arabia

இந்த நிலையில் டிரம்ப் - புடினின் அமைதிப் பேச்சுவார்த்தைக்கான இடமாக சவுதி அரேபியா தேர்வானதற்கு மற்றொரு முக்கியக் காரணமும் உள்ளது என சர்வதேச அரசியலைக் கவனித்து வரும் நிபுணர்கள் கூறுகின்றனர். சவுதி அரேபியா சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் உறுப்பினராக இல்லை.

மேலும், சவுதி அரேபியாவுடன் டொனால்ட் டிரம்ப் எப்போதும் இணக்கமாக இருக்கிறார். இரண்டாவது முறையாக டிரம்ப் பதவியேற்றதை சவுதி வரவேற்று இருந்தது. சவுதி, அமேரிக்கா இடையே 600 பில்லியன் டாலர் அளவிற்கான வர்த்தகமும் நடைபெறுவதற்கான சாத்தியக் கூறுகள் காணப்படுகிறது. இருநாடுகளும் இதற்கான பணிகளில் ஈடுபட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இதுதான், சவுதியை டிரம்ப் தேர்வு செய்யக் காரணம் என்றும் கூறப்படுகிறது.

67
Trump-Putin meeting in Saudi Arabia

உக்ரைன் மீதான தாக்குதல்களைத் தொடங்கியதும், ரஷ்யா மீது போர் குற்றம் சாட்டப்பட்டது. 2023ஆம் ஆண்டு இது தொடர்பான வழக்கை விசாரித்த சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினைக் கைது செய்ய உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் சவுதி அரேபியா அங்கம் வகிக்கவில்லை. இதனால், சவுதிக்குச் சென்றால் புடின் கைது செய்யப்படுவார் என்ற கவலைக்கு இடம் இருக்காது.

77
Trump-Putin meeting in Saudi Arabia

இது தவிர, ரஷ்யா - உக்ரைன் போரில் இருநாட்டுக் கைதிகளையும் விடுதலை செய்வது தொடர்பாக சவுதி அரேபியா பேச்சுவார்த்தைகள் நடத்தியுள்ளது. உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி, ரஷ்ய அதிபர் புடின் இருவரையும் சவுதி அரேபியா பல நிகழ்ச்சிகளுக்காக தங்கள் நாட்டுக்கு அழைத்துள்ளது. இந்த நடவடிக்கைகள் மூலம் சவுதி அரேபியா இரண்டு நாடுகளுக்கும் ஆதரவானதாகப் பார்க்கப்படுகிறது. போர் முடிவுக்கு வந்து இரு நாடுகளிலும் அமைதியை நிலைநாட்ட வேண்டும் என்றும் சவுத அரேபியா வலியுறுத்தி வருகிறது. இந்தக் காரணங்களால்தான் டிரம்ப் புதின் சந்திப்புக்கு சவுதி அரேபியா சரியான இடமாக இருக்கும் என முடிவு செய்யப்பட்டுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories