Donald Trump Stenographers in White House: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் அதிகப்படியான பேச்சு, ஸ்டெனோகிராஃபர்களின் பணிச்சுமையை அதிகரித்துள்ளது. முன்னாள் அதிபர் ஜோ பிடனை விட டிரம்ப் அதிகமாகப் பேசுவதால், ஒரே நாளில் 22,000 வார்த்தைகளுக்கு மேல் குறிப்பெடுக்க வேண்டியுள்ளது. இதனால் கூடுதல் பணியாளர்களை பணியமர்த்துவது குறித்து ஆலோசிக்கப்படுகிறது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அடிக்கடி செய்தியாளர் சந்திப்பு நடத்துவது அவர் பேசுவதைக் குறிப்பெடுக்கும் ஸ்டெனோகிராஃபர்களின் வேலையை மிகவும் கடினமாக ஆகியிருக்கிறது. மேலும் முன்னாள் அதிபர் ஜோ பிடனை விட மிக அதிகமாக பேசிவருவதும் டிரம்பின் விரைவாகப் பேச்சும் அவர்களை கூடுதல் சிரமத்துக்கு உள்ளாக்கி வருகிறது.
ட்ரம்ப் பலமுறை செய்தியாளர்களைக் கூட்டி பேசுவதால் ஸ்டெனோகிராஃபர்கள் ஒரே நாளில் 22,000 வார்த்தைகளுக்கு மேல் குறிப்பெடுத்துள்ளனர். அதைத் தொடர்ந்து வடக்கு கரோலினா மற்றும் கலிபோர்னியாவில் பேரிடர்களால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் சென்று பேசியபோது மேலும் 17,000 வார்த்தைகளைக் குறிப்பெடுத்துள்ளனர்.
24
Donald Trump stenographers
இப்படி நாளுக்கு நாள் பணிச்சுமை அதிகமாகி வருவதால், கூடுதல் பணியாளர்களை பணியமர்த்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக, வெள்ளை மாளிகைக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ட்ரம்ப் அதிபர் பதவிக்கு திரும்பியதும் இடைவிடாத பேச்சைத் தொடர்கிறார். தன்மீது தொடர்ந்து கவனம் குவியும் வகையில் பார்த்துக்கொண்டு வருகிறார். ஜோ பிடன் மிகவும் கட்டுப்படுத்தப்பட்ட அணுகுமுறையைக் கடைபிடித்தார். டிரம்ப் தொடர்ந்து ஊடக கவனத்தில் இருந்து வருகிறார். அதை அரசியல் அதிகாரத்தின் கருவியாகக் கருதுகிறார்.
34
Stenographers
அவரது இடைவிடாத பேச்சு சம்பிரதாயமான பேச்சுக்களுக்கு அப்பாற்பட்டதாக உள்ளது. ட்ரம்பின் பேச்சு குறித்த புள்ளிவிவரங்கள் திகைக்க வைக்கிறது. மீண்டும் பதவிக்கு வந்த முதல் வாரத்தில், அவர் ஏறக்குறைய எட்டு மணிநேரம் பேசி இருக்கிறார். அவர் மொத்தம் 81,235 வார்த்தைகளை உச்சரித்திருக்கிறார்.
இது, முன்னாள் அதிபர் ஜோ பிடன் தான் பதவியேற்ற முதல் ஒருவார காலத்தில் பேசியதை விட மூன்று மடங்கு அதிகம். இந்த எண்ணிக்கை ட்ரம்ப் முதல் முறை அதிபராக இருந்த காலத்தில் பேசியதை விடவும் அதிகமாக உள்ளது. அவர் அப்போது முதல் ஒரு வாரத்தில் நான்கு மணி நேரத்திற்கும் குறைவாகவே பேசியிருந்தார்.
44
Donald Trump
சிலர் இதை வெளிப்படைத்தன்மையுடன் தொடர்புபடுத்தி விளக்குகிறார்கள். ஆனால் இன்னொரு தரப்பினர் அதிகமாகப் பேசுவது அதிக தெளிவுடன் இருக்கவேண்டிய அவசியமில்லை என்று வாதிடுகின்றனர். இதுகுறித்து கருத்து கூறியுள்ள, அனென்பெர்க் பொதுக் கொள்கை மையத்தின் இயக்குநர் கேத்லீன் ஹால் ஜேமிசன், "இதுபோன்ற அபரிமிதமான தகவல் ஓட்டம் பொதுமக்களை சோர்வடையச் செய்துவிடும்.என்றும் பலர் அவரை விட்டு விலகிச் செல்லவும் வழிவகுக்கும் என்றும் எச்சரிக்கிறார்.
ஆனால் இப்போதைய நிலையில் வெள்ளை மாளிகையின் ஸ்டெனோகிராஃபர்கள் கடினமாக உழைக்கிறார்கள். டிரம்ப் பேசும் ஒவ்வொரு வார்த்தையையும் ஆவணப்படுத்துகிறார்கள்.