இந்த நாட்டில்  பெண்கள் தான் அதிகம்.. அப்ப ஆண்களுக்கு என்னதான் ஆச்சு.. காரணம் இதுதான்!!

Published : Feb 11, 2025, 03:22 PM ISTUpdated : Feb 11, 2025, 03:27 PM IST

Female Population Country : உலகிலேயே ஒரு நாட்டில் ஆண்களை விட பெண்களின் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது. அதற்கான காரணம் என்ன? அந்த நாடு எங்கு உள்ளது என்பதை குறித்து இங்கு காணலாம்.

PREV
16
இந்த நாட்டில்  பெண்கள் தான் அதிகம்.. அப்ப ஆண்களுக்கு என்னதான் ஆச்சு.. காரணம் இதுதான்!!
இந்த நாட்டில்  பெண்கள் தான் அதிகம்.. அப்ப ஆண்களுக்கு என்னதான் ஆச்சு.. காரணம் இதுதான்!!

பொதுவாக பயணம் செய்ய விரும்பும் மக்கள், தங்களுக்குப் பிடித்த இடங்களுக்கு செல்ல விரும்புவது மட்டுமல்லாமல், அந்த இடத்தின் கதையையும் அவர்கள் அறிந்து கொள்ள ரொம்பவே ஆர்வமாக இருப்பார்கள். அந்த வகையில் இந்த பதிவில் ஆண்களை விட பெண்கள் அதிகமாக நிறைந்த ஒரே நாட்டை பற்றி தான் தெரிந்து கொள்ளப் போகிறோம். பெண்களால் நிறைந்த இந்த நாடு சுற்றிப் பார்ப்பதற்கு மிகவும் சிறந்த இடம் ஆகும். இந்தியாவில் இருந்து இந்த நாட்டிற்கு எப்படி பயணம் செய்வது என்பதை பற்றியும் இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

26
லாட்வியா:

ஐரோப்பாவில் இருக்கும் பால்டிக் நாடானா லாட்வியாவைப் பற்றி தான் நாம் தெரிந்து கொள்ள போகிறோம். இந்த நாட்டில் தான் ஆண்களை விட பெண்களின் எண்ணிக்கை ரொம்பவே அதிகமாக உள்ளது. இன்னும் சொல்லப்போனால் லாட்வியா அதிக எண்ணிக்கையான பெண்களைக் கொண்ட மிகவும் அழகான நாடாகும்.

36
பெண்கள் எண்ணிக்கை அதிகம் உள்ள நாடு

ஊடக அறிக்கைகளின் படி 2025 ஆம் ஆண்டு நிலவரப்படி லாட்டரி பெண்களின் எண்ணிக்கையானது 963,624 ஆகும். இந்த நாட்டில் மொத்த மக்களின் தொகையானது 54% ஆகும். இங்கு பெண்களின் எண்ணிக்கை விட ஆண்களின் எண்ணிக்கை ரொம்பவே கம்மி.

46
காரணம் என்ன?

லாட்வியா நாட்டில் ஆண்களை விட பெண்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதற்கு முக்கிய காரணம் என்னவென்றால், அந்த நாட்டில் பெண்களின் ஆயுட்காலம் அதிகமாக இருப்பது தான். ஆம், லாட்வியா நாட்டில் பெண்கள் ஆண்களை விட நீண்ட காலம் வாழ்கிறார்களாம்.

இதையும் படிங்க:  ஒரே நேரத்தில் 44 ரயில்கள் நிற்கலாம்; ரகசிய நடைமேடை! உலகின் மிகப்பெரிய ரயில் நிலையம் இதுதான்!

56
லாட்வியா நாட்டின் சுற்றுலாத் தலங்கள்:

லாட்வியா நாடு அற்புதமான இயற்கை காட்சிகள் முதல் அழகான ஏரிகள் வரை பல சுற்றுலா தலங்களை கொண்டுள்ளன. கோல்டன் ஃபிஷ் தெரு, கெளஜா தேசிய பூங்கா, ரிகா பழைய நகரம், சில்மேஸ் ஏரி ஆகியவை இந்த நாட்டின் மிக முக்கிய சுற்றுலா தலங்களாகும்.

இதையும் படிங்க:   ஒரு குழந்தை கூட பிறக்காத ஒரே நாடு இது தான்! எங்குள்ளது தெரியுமா?

66
இந்தியாவில் இருந்து எப்படி செல்வது?

இந்தியாவிலிருந்து லாட்வியாவிற்கு நேரடியாக செல்ல விமானங்கள் ஏதும் கிடையாது. எனவே நீங்கள் ஜெர்மனி, போலான் அல்லது பின்லாந்து வழியாக தான் ரிகாவை அடைய முடியும். முக்கியமாக சீசன் இல்லாத நேரத்தில் இந்த நாட்டிற்கு செல்ல ரூ. 50 ஆயிரம் தான் ஆகும்.

click me!

Recommended Stories