பூமியின் கடைசி நாள் நெருங்கிவிட்டது! விஞ்ஞானிகள் சொல்லும் அதிர்ச்சி தகவல்!

Published : Nov 03, 2024, 12:34 PM IST

பூமியின் கடைசி நாள் நெருங்கிவிட்டது. மனிதர்கள் மற்றும் விலங்குகள் உள்பட எல்லா உயிரினங்களும் கூண்டோடு அழியும் என பிரிஸ்டல் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர்.

PREV
17
பூமியின் கடைசி நாள் நெருங்கிவிட்டது! விஞ்ஞானிகள் சொல்லும் அதிர்ச்சி தகவல்!
End of the world

கடந்த சில ஆண்டுகளாக பல நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. இதனால் பூமி அழிவை நோக்கி நகர்ந்து வருகிறது என்று சிலர் கூறுகிறார்கள். ஆனால் இந்த பின்னணியில் விஞ்ஞானிகள் மற்றொரு அதிர்ச்சியான விஷயத்தை சமீபத்தில் வெளியிட்டுள்ளனர்.

27
Scientists on dooms day

பூமியில் மனிதர்கள், விலங்குகள் உள்ளிட்ட எந்த உயிரினமும் வாழமுடியாத நிலை வரும் என்றும் பூமி முற்றிலும் அழிந்துவிடும் என்றும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். கணினி உருவகப்படுத்துதல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பிரிஸ்டல் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் நடந்திய ஆராய்ச்சியின் முடிவில் இதனைத் தெரிவித்துள்ளனர்.

37
In 250 million years

விஞ்ஞானிகள் வெளியிட்ட ஆய்வு அறிக்கையில், 250 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் நடந்தது போல பூமியில் பெருவெள்ளம் ஏற்படும் என்று தெரிவித்துள்ளனர். அப்போது பூமியில் மனிதர்கள் உட்பட அனைத்து உயிரினங்களும் அழிந்துவிடும் என்று கூறுகின்றனர்.

47
70 degree Celsius

அப்போது பூமியின் வெப்பநிலை 70 டிகிரி செல்சியஸை எட்டும். இப்படிப்பட்ட வெப்பமான சூழலில் எந்த உயிரினமும் பூமியில் வாழ முடியாது. வெப்பம் அதிகரிப்பதால் அனைத்து உயிரினங்களும் இறக்க நேரிடும் என விஞ்ஞானிகள் விளக்குகின்றனர்.

57
Dinosaurs

பூமியில் கரியமில வாயுவின் அளவு அதிகரித்து பூமியை அழிக்கும் என்றும் இந்த ஆராய்ச்சி சொல்கிறது. 66 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு இதேபோன்ற ஒரு நிகழ்விற்குப் பிறகு தான் டைனோசர்கள் அழிந்தாகக் கூறப்படுகிறது என்றும் சுட்டிக்காட்டுகிறார்கள்.

67
Continents

ஆய்வுக் குழுவின் தலைவர் அலெக்சாண்டர் ஃபார்ன்ஸ்வொர்த் கூறுகையில், கடந்த காலத்தில் இருந்ததை விட இப்போது கார்பன் டை ஆக்சைட்டின் அளவு இரண்டு மடங்கு அதிகமாக இருக்கிறது. எதிர்கால பூமியின் அனைத்து கண்டங்களும் ஒன்றிணைந்து பாங்கேயா அல்டிமா என்ற சூப்பர் கண்டம் உருவாகும்.

77
Volcanos

பூமியின் எரிமலைகள் அதிக அளவு கார்பன் டை ஆக்சைடை வெளியிடுகின்றன. இதனால் மக்கள் சுவாசிக்க சிரமம் ஏற்பட்டு, படிப்படியாக பூமியில் உயிர் வாழ்வது கடினமாகிவிடும் என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.

Read more Photos on
click me!

Recommended Stories