சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி தற்போது பாகிஸ்தானுக்கு பயணம் செய்துள்ளார். இந்தியா, ஆப்கானிஸ்தானுக்கு பயணம் செய்த பிறகு, வாங் யி இப்போது பாகிஸ்தான் சென்றுள்ளார். நேற்று சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி, பாகிஸ்தான் ராணுவத் தலைவர் அசிம் முனீருடன் உயர்மட்ட சந்திப்பில் கலந்து கொண்டார். பாகிஸ்தானில் ராணுவம், முனீரின் செல்வாக்கை சீன அரசு அங்கீகரித்து முக்கியத்துவம் கொடுத்து வருகிறது என்பது இந்த சந்திப்பில் இருந்து தெளிவாகிறது. இப்போது வாங் யி உடனான முனீரின் இந்தச் சந்திப்பு இந்தியாவின் கவலையை அதிகரித்துள்ளது.
முனீருக்கும், வாங் யிக்கும் இடையிலான பேச்சுவார்த்தையை ஆப்கானிஸ்தானும், இந்தியாவும் உற்று நோக்கி வருகிறது. மேற்கத்திய கூட்டணிகள், இந்தோ-பசிபிக் பகுதியில், குறிப்பாக அமெரிக்க ஆதரவு பெற்ற குவாட் நாடுகளுக்கு எதிரான முக்கிய செய்தியை வலுப்படுத்தும் முயற்சியாக இதனை ஆய்வாளர்கள் பார்க்கின்றனர்.