அமெரிக்கா சுற்றுலா விசா பெறுவது இனி கடினமாகலாம். பயணிகள் ரூ.13 லட்சம் வரை டெபாசிட் செலுத்த வேண்டியிருக்கலாம். விதிமீறல்கள் இருந்தால் டெபாசிட் பணத்தை இழக்க நேரிடும்.
அமெரிக்கா டூரிஸ்ட் விசா வாங்குறதுக்கே இனிமேல் கடினமான நிலைமை உருவாகப் போகுது என்றே கூறலாம். இதன்படி, வெளிநாடுகளிலிருந்து வருகிறவர்களுக்கு விசா தரும் முன் ஒரு பெரிய தொகையை டெபாசிட் செய்யணும் என்ற திட்டம் மீண்டும் கொண்டு வரப்படலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது.
24
அமெரிக்கா டூரிஸ்ட் விசா
இந்த திட்டத்தின்படி, அமெரிக்கா வரும் பயணிகள் ரூ.13 லட்சம் (அல்லது 15,000 அமெரிக்க டாலர்கள்) வரை முன்பணம் செலுத்த வேண்டும். இந்தத் தொகை, பயணிகள் அவர்கள் விதிகளை மீறாமல் நாடு திரும்புகிறாரா என்பதை உறுதி செய்யும் வகையில் அமெரிக்கா அரசு வைத்திருக்கும் பாதுகாப்பு டெபாசிட் மாதிரியானது என்று கூறப்படுகிறது. ஒரு பயணி தங்கவேண்டிய காலத்துக்கு மேல் தங்கினால், அவர் இந்த டெபாசிட் பணத்தை இழக்க நேரிடும்.
34
டொனால்ட் ட்ரம்ப்
இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டால் இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், நேபாளம் போன்ற நாடுகளைச் சேர்ந்த பயணிகளே அதிகம் பாதிக்கப்படுவார்கள். ஏற்கனவே இந்நாடுகளின் சில பயணிகள் அமெரிக்காவில் தங்கியிருப்பதற்கான விதிகளை மீறியதாக பதிவு இருக்கின்றது என்பதால், ட்ரம்ப் இந்த திட்டத்தை முன்னிறுத்துகிறார். வெறும் சுற்றுலா பார்க்கவே அமெரிக்கா செல்ல நினைப்பவர்கள் இந்த திட்டத்தால் பெரிதும் பாதிக்கப்படுவார்கள்.
ஏற்கனவே விமான டிக்கெட், தங்கும் இடம், கையிருப்பு பணம் என செலவுகள் அதிகமிருக்க, ரூ.13 லட்சம் டெபாசிட் கட்டணமாக கொடுப்பது மிகவும் கடினம் தான். அதுமட்டுமின்றி விசா காலம் முடிந்தவர்களும் ரூ.13 லட்சம் ரூபாயை கட்ட வேண்டிய சூழல் ஏற்படலாம். தமிழ்நாட்டில் இருந்து அமெரிக்கா செல்ல நினைப்பவர்கள், எதிர்கால பயணத் திட்டங்களை சற்று எச்சரிக்கையுடன் திட்டமிடுவது நல்லது.