"இந்தியா, ரஷ்யாவுடன் என்ன செய்தாலும் எனக்கு கவலையில்லை. அவர்கள் தங்கள் இறந்த பொருளாதாரங்களை ஒன்றாக மண்ணில் புதைக்கட்டும், எனக்கு கவலையில்லை, "நாங்கள் இந்தியாவுடன் மிகக் குறைந்த வர்த்தகமே செய்துள்ளோம், அவர்களின் வரிகள் மிக அதிகமாக உள்ளன, உலகிலேயே மிக உயர்ந்தவை" என்று அவர் மேலும் கூறினார்.
ஆகஸ்ட் 1 முதல் இந்தியாவில் இருந்து வரும் அனைத்துப் பொருட்களுக்கும் 25 சதவீத வரி விதிக்கப்படும் என்றும், ரஷ்ய கச்சா எண்ணெய் மற்றும் இராணுவ உபகரணங்களை வாங்குவதற்கு குறிப்பிடப்படாத அபராதம் விதிக்கப்படும் என்றும் டிரம்ப் புதன்கிழமை அறிவித்தார்.
ஆகஸ்ட் 25 ஆம் தேதி முதல் வர்த்தக ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்க வர்த்தகக் குழு ஒன்று இந்தியா வரும் என்று இந்திய அதிகாரிகள் கூறிய மறு நாளே இந்த அறிவிப்பு வெளியானது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.