டொனால்டு டிரம்ப் சீனாவைத் தவிர மற்ற நாடுகளுக்கான பதில் வரியை 90 நாட்களுக்கு நிறுத்தி வைத்துள்ளார். அதே நேரத்தில், சீனாவுக்கான வரி விகிதத்தை 125% ஆக உயர்த்தியுள்ளார். இது உடனடியாக அமலுக்கு வந்துள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் சீனாவைத் தவிர மற்ற அனைத்து நாடுகளுக்கும் பதில் வரியை 90 நாள் இடைநிறுத்தம் செய்வதாக அறிவித்துள்ளார். புதிய வரி விதிப்பு அமலுக்கு வந்த 24 மணிநேரத்திற்குள் திடீரென பின்வாங்கியிருக்கிறார். ஆனால் சீனாவிற்கு மட்டும் இது பொருந்தாது. மேலும், சீனாவக்கான வரி விகிதத்தை 125% ஆக உயர்த்துவதாகவும் டிரம்ப் கூறியுள்ளார். இது உடனடியாக அமலுக்கும் வந்துவிட்டது.
25
பெரும்பாலான நாடுகளுக்கு 10% அடிப்படை வரி விகிதம் கடந்த சனிக்கிழமை முதல் அமலுக்கு வந்தது. இது ஐரோப்பிய ஒன்றியத்திற்கு டிரம்ப் நிர்ணயித்த 20% வரியை விட கணிசமாகக் குறைவு. ஜப்பானில் இருந்து இறக்குமதிகள் மீது 24% மற்றும் தென் கொரியாவிலிருந்து வரும் பொருட்களுக்கு 25% வரி விதிக்கப்படுகிறது. 10% வரி அமெரிக்க அரசாங்கத்தால் முன்னர் வசூலிக்கப்பட்ட வரிகளில் அதிகரிப்பாக இருக்கும் என்றும் நிபுணர்கள் கூறினர்.
35
US President Donald Trump at National Republican Congressional Committee (NRCC) dinner in Washington DC (Image/Reuters)
"உலக சந்தைகளுக்கு சீனா காட்டிய மரியாதையின்மையின் அடிப்படையில், அமெரிக்காவால் சீனாவிற்கு விதிக்கப்படும் வரியை 125% ஆக உயர்த்துகிறேன். இது உடனடியாக அமலுக்கு வரும். அமெரிக்கா மற்றும் பிற நாடுகளைச் சுரண்டுவது இனி ஏற்றுக்கொள்ள முடியாது என்பதை ஒரு கட்டத்தில் சீனா உணரும் என நம்புகிறேன்," என்று டிரம்ப் ட்ரூத் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
45
75 க்கும் மேற்பட்ட நாடுகள் வர்த்தகம், வர்த்தக தடைகள், வரி விகிதம் போன்ற விவகாரங்கள் தொடர்பாக ஒரு தீர்வை எட்டுவதற்கான பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்துள்ளது. இந்த நாடுகள், எனது வலுவான பரிந்துரையின் பேரில், அமெரிக்காவை எந்த வகையிலும் பழிவாங்கவில்லை என்று உறுதி அளித்திருக்கின்றன. அதன்படி, பதில் வரி விதிப்பில் 90 நாள் இடைநிறுத்தத்தை அறிவிக்கிறேன் எனவும் டிரம்ப் தனது சமூக வலைத்தளப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
55
முன்னதாக, டிரம்ப் சீனா மீது அதிகபட்சமாக 34% பதில் வரி அறிவித்ததை அடுத்து, சீனாவும் பதிலுக்கு அமெரிக்கப் பொருட்கள் மீது 34 சதவீத பதில் வரியை அறிவித்தது. இதனைத் திரும்பப் பெற டிரம்ப் சீனாவுக்கு 24 மணிநேர அவகாசம் அளித்திருந்தார். சீனா இதனை வன்மையாகக் கண்டித்ததை அடுத்து, சீனப் பொருட்கள் மீது 104 சதவீத வரி நேற்று அமலுக்கு வந்தது. அடுத்த 24 மணிநேரத்திற்குள் சீனா மீதான வரி 125 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.