ரஷ்யா, இந்தியா, பாகிஸ்தான், கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், ஈரான், பெலாரஸ், துருக்கி உள்ளிட்ட 20 நாடுகளின் தலைவர்கள் சீனாவின் தியான்ஜின் நகரில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள இருக்கிறார்கள். இது கடந்த 10 ஆண்டுகளில் நடைபெறும் மிகப்பெரிய உச்சி மாநாடு. வெவ்வேறு சர்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகளும் இதில் பங்கேற்கின்றனர். அதாவது, அமெரிக்கா இனி ஒரே வல்லரசு அல்ல, உலகில் மேற்கத்திய நாட்டிற்கு எதிராக மற்றொரு முகாம் உருவாகியுள்ளது என்கிற செய்தியை ஜி ஜின்பிங் உலகிற்கு உணர்த்த முயற்சிக்கிறார். இந்தியாவின் பிரதமர் மோடி, ரஷ்யாவின் ஜனாதிபதி விளாடிமிர் புடினும் இந்த மேடையில் இருப்பார்கள்.
டிரம்ப் இந்தியாவின் மீது 50 சதவீத வரியை விதித்துள்ளார். இது இந்திய பொருளாதாரத்தில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும். ஷாங்காய் உச்சி மாநாடு இந்தியாவிற்கும், அமெரிக்காவிற்கும் இடையிலான உறவுகள் தொடர்ந்து மோசமடைந்து வரும் நேரத்தில் நடைபெறுகிறது. இந்த உச்சிமாநாட்டில் பல நாட்டுத் தலைவர்கள் இருப்பது சீனாவின் லட்சியம் இனி ஆசியாவுடன் மட்டும் நின்றுவிடாது. ஷாங்காய் உச்சி மாநாட்டின் மூலம், சீனாவைத் தொட அமெரிக்காவிற்கு இனி திறன் இல்லை என்கிற தகவலை கொடுக்க முயற்சிக்கிறார் ஜி ஜின்பிங்.