சுனிதா வில்லியம்ஸ் உடலில் என்ன பாதிப்பு ஏற்படும்? மீண்டு வருவது எப்படி?

Published : Mar 19, 2025, 11:24 AM IST

9 மாதங்கள் விண்வெளியில் தங்கியிருந்த சுனிதா வில்லியம்ஸ், பூமிக்கு திரும்பியதை தொடர்ந்து, பல உடல்நல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என்று கூறப்படுகின்றது.

PREV
15
சுனிதா வில்லியம்ஸ் உடலில் என்ன பாதிப்பு ஏற்படும்? மீண்டு வருவது எப்படி?

விண்வெளியில் இருந்துவிட்டு பூமிக்கு திரும்புவகிறவர்கள் மிகவும் கடினமான சவால்களைச் சந்திக்க வேண்டியிருக்கும். குறிப்பாக, பூமிக்குத் திரும்பியபின் விண்வெளி வீரர்கள் பல உடல்நலப் பாதிப்புகளுக்கு உள்ளாகின்றனர். எலும்பு மற்றும் தசைச் சிதைவு, கதிர்வீச்சு தாக்கம், பார்வைக் குறைபாடு மற்றும் உளவியல் ரீதியான தனிமையுணர்வு போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம். இதனை எதிர்கொள்வதற்கு விண்வெளி வீரர்கள் பூமிக்குத் திரும்பிய பிறகும் பிரத்யேகமான கவனிப்பு தேவைப்படுகிறது.

நீண்டகாலம் விண்வெளியில் இருந்துவிட்டு வந்தவர்கள், பூமியில் இயல்பாக நடக்கவும், செயல்படவும் கஷ்டப்படுவார்கள். விண்வெளியில் புவியீர்ப்பு விசை இருக்காது. புவியீர்ப்பு விசை இல்லாத சூழலில் இருந்திருப்பதால், எலும்புச் சிதைவு கூட ஏற்படக்கூடும்.

25

உடல் எடையிழப்பு, தசை இழப்பு, நரம்பியல் பிரச்சனைகள் போன்றவை விண்வெளியில் இருந்து பூமிக்குத் திரும்பிய வீரர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளாகும். உடல் மற்றும் மன ரீதியாக இயல்பு நிலைக்கு மீண்டுவர, விண்வெளி வீரர்கள் 45 நாட்கள் வரை நாசா மையத்திலேயே தங்குவார்கள்.

விண்வெளிப் பயணத்தின் முடிவில், வீரர்கள் தங்கள் பழைய நிலைக்குத் திரும்ப ஆறு மாதங்கள் வரை ஆகலாம் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

35
Sunita Williams

சர்வதேச விண்வெளி நிலையத்திற்குச் செல்லும் வீரர்கள் பொதுவாக ஆறு மாதங்கள் வரை அங்கே தங்கிவிட்டுத் திரும்புவார்கள். ஆனால் சில விண்வெளி வீரர்கள் ஒரு வருடம் வரை தங்குவார்கள். அந்த காலத்தில் விண்வெளி வீரர்கள் தங்கள் ஆரோக்கியத்தைப் பராமரிக்க பல்வேறு உடற்பயிற்சிகளைச் செய்கின்றனர்.

விண்வெளி நிலையத்தில் இருப்பவர்கள் மூன்று உடற்பயிற்சி இயந்திரங்களைப் பயன்படுத்துகின்றனர், 2009-ல் நிறுவப்பட்ட எதிர்ப்பு சாதனம் (resistance device) வெற்றிடக் குழாய்கள் மற்றும் ஃப்ளைவீல் கேபிள்களைப் பயன்படுத்தி பழுதூக்கும் பயற்சிக்கு பயன்படுகிறது. உருவகப்படுத்துகிறது.

45
sunita willimas

தினமும் இரண்டு மணி நேர உடற்பயிற்சி செய்து விண்வெளி வீரர்களை நல்ல நிலையில் வைத்திருக்கும் என்று விஞ்ஞானிகள் சொல்கிறார்கள். விண்வெளி வீரர்கள் பூமிக்குத் திரும்பியதும் அவர்கள் நன்றாக இருக்கிறார்கள் என்பதற்கு முக்கியமான அடையாளம் எலும்பு முறிவு பிரச்சனை இல்லாமல் இருப்பதுதான்.

விண்வெளி வீரர்கள் பூமிக்குத் திரும்பியதும் எதிர்கொள்ளும் இன்னொரு பிரச்சினை சமநிலை குலைவு. அதாவது அவர்கள் நடப்பதில் சிரமத்தை எதிர்கொள்வார்கள். ஒருசில நாட்களுக்கு மட்டுமே விண்வெளிக்குச் சென்று வந்தவர்களுக்கும் கூட இது நடக்கும்.

55

விண்வெளி நிலையம் வான் ஆலன் கதிர்வீச்சு பெல்ட் வழியாகச் செல்வதால், அதில் உள்ள கதிர்வீச்சு அளவுகள் பூமியில் இருப்பதை விட அதிகமாக உள்ளன. ஆனால் பூமியின் காந்தப்புலம் இன்னும் குறிப்பிடத்தக்க பாதுகாப்பை வழங்குகிறது. விண்வெளி வீரர்களின் புற்றுநோய் அபாயத்தை மூன்று சதவீதத்திற்குள் கட்டுப்படுத்த நாசா இலக்கு வைத்திருப்பதால், அவர்கள் அணியும் கவசம் மிகவும் முக்கியமானது.

இருப்பினும், நிலவு மற்றும் செவ்வாய் கிரகத்திற்குச் செல்லும் பயணங்கள் விண்வெளி வீரர்கள் மிக அதிக கதிர்வீச்சு பாதிப்புக்கு ஆளாகலாம். ஆனால் அண்டவெளியில் கதிர்வீச்சு கணிக்க முடியாததாகவே உள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories