
விண்வெளியில் சுனிதா வில்லியம்ஸ்:
59 வயதான சுனிதா வில்லியம்ஸ் 8 நாள் பயணத்திற்காக விண்வெளிக்குச் சென்றார். ஆனால், 9 மாதங்களுக்குப் பிறகுதான் அவர் பூமிக்குத் திரும்பும் நேரம் வந்திருக்கிறது. பல பிரச்சனைகளுக்குப் பிறகு, சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோருடன் விண்ணில் ஏவப்பட்ட ஸ்டார்லிங்க் விண்கலம் சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்தது.
தொழில்நுட்ப காரணங்களால் விண்கலம் அவர்களை அங்கேயே விட்டுவிட்டு திரும்ப வேண்டியதாயிற்று. பின்னர், அவர்கள் இருவரையும் திரும்பக் கொண்டுவரும் முயற்சிகள் பல்வேறு காரணங்களால் தோல்வியடைந்தது. அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவும் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் நிறுவனமும் அவர்களை மீட்க கூட்டு முயற்சியில் ஈடுபட்டனர். அதற்கு இப்போது பலன் கிடைத்துள்ளது. இருவரும் செவ்வாய்க்கிழமை மாலை 5.57 மணிக்கு புளோரிடா கடற்கரைக்கு அருகில் உள்ள கடல் நீரில் ஸ்பேஸ்எக்ஸ் காப்ஸ்யூலில் தரையிறங்குவார்கள். பின் ஒவ்வொருவராக வெளியே கொண்டுவரப்படுவார்கள்.
பூமிக்குத் திரும்பும் சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர்; எப்போது தெரியுமா? நாசா அறிவிப்பு
தினமும் 16 சூரிய உதயங்களைப் பார்த்த சுனிதா வில்லியம்ஸ்!
பொதுவாக பூமியில் இருப்பவர்கள் ஒரு நாளில் ஒரே ஒருமுறைதான் சூரிய உதயத்தைப் பார்க்க முடியும். ஆனால், சுனிதா வில்லியம்ஸ் விண்வெளியில் இருந்த 9 மாதங்களில் தினமும் 16 சூரிய உதயங்களையும், 16 சூரிய அஸ்தமனங்களையும் பார்த்திருக்கிறார். இது எப்படி சாத்தியம்?
சுனிதா வில்லியம்ஸ் சென்ற சர்வதேச விண்வெளி நிலையம் பூமியைச் சுற்றி வேகமாகச் சுழல்கிறது. இது பூமியை ஒருமுறை சுற்றி வர சுமார் 90 நிமிடங்கள் ஆகும். இந்தக் கணக்கின்படி, சர்வதேச விண்வெளி நிலையம் 24 மணிநேரத்தில் சுமார் 16 முறை பூமியைச் சுற்றி வருகிறது. ஒவ்வொரு முறையும் பூமியைச் சுற்றி வரும்போது, ஒருமுறை சூரிய உதயமும் சூரிய அஸ்தமனமும் நடைபெறும். இதனால், விண்வெளி நிலையத்தில் இருப்பவர்கள் 24 மணிநேரத்தில் 16 சூரிய அஸ்தமனங்களையும் 16 சூரிய உதயங்களையும் பார்க்கலாம்.
அமெரிக்க நுண்ணறிவு பிரிவு இயக்குநர் துளசி கப்பார்டு இந்தியா வருகை
சுனிதா வில்லியம்ஸ் ஏன் விண்வெளிக்குச் சென்றார்?
அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா (NASA) மற்றும் தனியார் நிறுவனமான போயிங் (Boeing) இணைந்து சுனிதா வில்லியம்ஸ் மற்றும் மற்றொரு விண்வெளி வீரர் புட்ச் வில்மோர் இருவரையும் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (ISS) அனுப்ப முடிவு செய்தனர். இதன் ஒரு பகுதியாக, போயிங் தயாரித்த ஸ்டார்லைனர் விண்கலம் இவர்கள் இருவரையும் ஏற்றிக்கொண்டு 2024 ஜூன் 5 அன்று புறப்பட்டது.
புளோரிடாவில் உள்ள கேப் கனாவெரல் விண்வெளி மையத்திலிருந்து ஏவப்பட்ட விண்கலம் ஜூன் 6 அன்று சர்வதேச விண்வெளி நிலையத்தை ஐ அடைந்தது. சுனிதா, புட்ச் இருவரும் 8 நாட்கள் அங்கு தங்கி ஆராய்ச்சி வேலைகளை முடித்துவிட்டு பூமிக்குத் திரும்புவார்கள் என்று திட்டம் போடப்பட்டிருந்தது. ஆனால் திடீரென யாரும் எதிர்பாராத பிரச்சனை வந்ததால் இருவரும் அங்கேயே தங்கவேண்டிய கட்டயாம் ஏற்பட்டது.
ஏமனில் ராணுவ நடவடிக்கையை நிறுத்துங்க! அமெரிக்காவுக்கு ஐ.நா. தலைவர் வலியுறுத்தல்
8 நாட்களுக்குப் பிறகு ஏன் பூமிக்குத் திரும்ப வரவில்லை?
சுனிதாவை விண்வெளிக்கு அழைத்துச் சென்ற ஸ்டார்லைனர் விண்கலத்திலேயே அவர் பூமிக்குத் திரும்பி வருவதாக இருந்தது. ஆனால் எதிர்பாராத விதமாக அதன் த்ரஸ்டரில் பிரச்சனை ஏற்பட்டது. ராக்கெட் இன்ஜினுக்கு எரிபொருள் சீராக செல்ல தேவையான அழுத்தத்தை அளிக்க முடியவில்லை. அதிலிருந்து ஹீலியம் கசியத் தொடங்கியது. இதனால், விண்கலம் நடுவழியில் வெடிக்கும் அபாயம் இருந்தது.
ஒருவேளை அப்படி நடந்திருந்தால் கல்பனா சாவ்லாவை இழந்த சோக சம்பவம் மீண்டும் ஒருமுறை நடந்திருக்கும். இந்த ஆபத்தைத் தவிர்க்க சுனிதா, புட்ச் வில்மோர் இருவரையும் விண்வெளியிலேயே விட்டுவிட்டு, ஆளில்லாமல் ஸ்டார்லைனர் காப்ஸ்யூல் பூமிக்குத் திரும்பியது.
வட மக்கெடோனியா இரவு நேர விடுதியில் தீ விபத்து: 51 பேர் பலி, பலர் காயம்
சுனிதா வில்லியம்ஸ் விண்வெளியில் என்ன சாப்பிட்டார்?
விண்வெளி நிலையத்தில் இருக்கும் சுனிதாவுக்கு 3 மாதங்களுக்கு ஒருமுறை உணவு சப்ளை செய்யப்பட்டது. நாசாவின் தகவல்படி, ஒரு விண்வெளி வீரருக்கு 1.7 கிலோ உணவு தேவைப்படுகிறது. இதில் தானியங்கள், பால் பவுடர், பிட்சா, இறால் காக்டெய்ல், வறுத்த கோழி, சூரை மீன் போன்றவை இருக்கும்.
அனைத்தையும் பூமியிலேயே தயார் செய்து அனுப்புகிறார்கள். விண்வெளி நிலையத்தில் இருக்கும் விண்வெளி வீரர்கள் அவற்றைச் சூடாக்கிச் சாப்பிடுகிறார்கள். குடிப்பதற்குத் தேவையான தண்ணீரை தங்கள் சிறுநீர் மற்றும் வியர்வையில் இருந்துதான் பெறுகிறார்கள். அவற்றை சுத்திகரித்து குடிநீராக மாற்றிக் குடிக்கிறார்கள்.
சந்திரயான் 5 திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல்: இஸ்ரோ தலைவர் வி. நாராயணன் தகவல்