போரில் புது ட்விஸ்ட்! அமெரிக்காவை மதிக்காத ‍புதின்! பேரழிவு ஏற்படும் என டிரம்ப் எச்சரிக்கை!

Published : Mar 13, 2025, 04:11 PM IST

ரஷ்யா-உக்ரைன் இடையே போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்க விளாடிமிர் புதின் மறுத்து வருகிறார். இதற்கு டிரம்ப் கண்டனம் தெரிவித்துள்ளார்.

PREV
14
போரில் புது ட்விஸ்ட்! அமெரிக்காவை மதிக்காத ‍புதின்! பேரழிவு ஏற்படும் என டிரம்ப் எச்சரிக்கை!

Trump warned Putin: ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே கடந்த 2022ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் சுமார் 3 ஆண்டுகளுக்கு மேலாக போர் நடந்து வருகிறது. இந்த போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முயன்று வருகிறார். இதனால் இதுவரை எதிரியாக இருந்த ரஷ்யாவுடன் கைகோர்த்தார் டிரம்ப். இந்த போர் தொடர்பாக அமெரிக்காவுக்கும், ரஷ்யாவுக்கும் இடையே கடந்த மாதம் சவூதி அரேபியாவில் பேச்சுவார்த்தை நடந்தது.

24
டொனால்ட் டிரம்ப்-விளாடிமிர் புதின்

இதனைத் தொடர்ந்து அமெரிக்காவுக்கும், ரஷ்யாவுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்தது. இந்த பேச்சுவார்த்தை முடிவில் ரஷ்யாவுக்கும், உக்ரைனுக்கும் இடையே 30 நாள் இடைக்கால போர் நிறுத்தம் செய்வது என முடிவெடுக்கப்பட்டது. இந்த முடிவுக்கு உக்ரைன் வரவேற்பு தெரிவித்து அதை செயல்படுத்த தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளது. உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இதனை வரவேற்றுள்ளார். 

ஆனால் 30 நாள் இடைக்கால போர் நிறுத்தம் குறித்து பேச மறுக்கும் ரஷ்யா, இது தொடர்பாக அமெரிக்காவின் விளக்கத்துக்கு காத்திருப்பதாக கூறியுள்ளது. ரஷ்யாவின் இந்த செயல் டொனால்ட் டிரம்புக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் கோபம் அடைந்த டிரம்ப், ''போர் நிறுத்தத்தை மறுப்பது பேரழிவை ஏற்படுத்தும்'' என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். 

இது ரத்த பூமி... ஈரானில் சிகப்பு நிறத்தில் ஓடிய வெள்ளம் - அதன் வியக்க வைக்கும் பின்னணி இதோ

34
டொனால்ட் டிரம்ப்-ஜெலன்ஸ்கி

வெள்ளை மாளிகையில் அயர்லாந்து பிரதமர் மைக்கேல் மார்ட்டினுடனான சந்திப்பிற்குப் பிறகு பேசிய டொனால்ட் டிரம்ப், ''உக்ரைன் 30 நாள் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்ட ஒரு நாளுக்குப் பிறகு, சாத்தியமான போர் நிறுத்தம் குறித்த பேச்சுவார்த்தைக்காக அமெரிக்க அதிகாரிகள் இப்போது" ரஷ்யாவிற்குச் செல்கிறார்கள்'' என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய டிரம்ப், ''ரஷ்யாவிடமிருந்து போர்நிறுத்தத்தைப் பெற முடியும் என்று நம்புகிறோம். அவ்வாறு செய்தால், இந்த கொடூரமான இரத்தக்களரியை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான 80 சதவீத வழி இதுவாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன். ஆனால் ரஷ்யா போர் நிறுத்தத்தை ஏற்க மறுத்தால்  பேரழிவை ஏற்படுத்தும். ரஷ்யாவிற்கு நாம் மிகவும் மோசமான விஷயங்களைச் செய்ய முடியும்.

அது ரஷ்யாவிற்கு பேரழிவை ஏற்படுத்தும். ஆனால் நான் அதைச் செய்ய விரும்பவில்லை. ஏனென்றால் நான் அமைதியைக் காண விரும்புகிறேன்'' என்று தெரிவித்துள்ளார்.

44
ரஷ்யா-உக்ரைன் போர்

டொனால்ட் டிரம்ப்பின் இந்த பேச்சு ரஷ்யா, அமெரிக்கா இடையே மீண்டும் உறவில் விரிசலை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. போர் நிறுத்தும் குறித்து அமெரிக்கா உக்ரைனுடன் பேச்சுவார்த்தை நடத்தியதை ரஷ்யா விரும்பவில்லை என பலரும் கூறுகின்றனர். 30 நாள் போர் நிறுத்த ஒப்பந்தத்தை ரஷ்யா ஏற்க மறுப்பது கஷ்டம் என்றும் இதனால் டிரம்ப் ரஷ்யா மீது மீண்டும் பொருளாதார தடை விதிக்க வாய்ப்புள்ளது எனவும் தகவல்கள் கூறுகின்றன.

சவுதி அரேபியாவில் அமெரிக்க மற்றும் உக்ரேனிய அதிகாரிகளுக்கு இடையேயான பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து வெளிவந்த ரஷ்யாவுடன் 30 நாள் போர்நிறுத்தத்திற்கு உக்ரைன் ஒப்புக்கொண்டதை ஐரோப்பிய ஒன்றியம் (EU) வரவேற்றது. 27 நாடுகளைக் கொண்ட ஐரோப்பிய ஒன்றியம் உக்ரைன், அமெரிக்கா மற்றும் பிற கூட்டாளிகளுடன் சேர்ந்து வரவிருக்கும் நடவடிக்கைகளுக்கு ஆதரவளிப்பதில் அதன் "முழு பங்கை" வகிக்கத் தயாராக இருப்பதாகக் கூறியுள்ளது.

முடிவுக்கு வந்தது பாகிஸ்தான் ரயில் முற்றுகை: 346 பயணிகளை பத்திரமாக மீட்ட இராணுவம்!

Read more Photos on
click me!

Recommended Stories