பூமிக்குள் மறைந்திருக்கும் பிரம்மாண்ட கடல்… விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு!

Published : Mar 28, 2026, 08:03 PM IST

விஞ்ஞானிகள் பூமியின் மேற்பரப்பிற்கு 700 கிமீ கீழே ஒரு பெரிய நீர் தேக்கத்தைக் கண்டுபிடித்துள்ளனர். இந்த நீர், 'ரிங்வுடைட்' என்ற கனிமத்தில் சிக்கியுள்ளது மற்றும் பூமியின் அனைத்து கடல்களையும் விட அதிகமாக இருக்கலாம்.

PREV
14
பூமிக்குள் 700 கி.மீ ஆழத்தில் கடல்

பூமியின் அடியில் என்ன இருக்கிறது என்ற கேள்வி மனிதர்களை எப்போதும் ஆச்சரியப்படுத்திக் கொண்டே இருக்கிறது. தற்போது, ​​விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ள புதிய தகவல் அதைவிட பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பூமியின் மேற்பரப்பில் இருந்து சுமார் 700 கிலோமீட்டர் ஆழத்தில், மிகப்பெரிய அளவில் நீர் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஆய்வை அமெரிக்காவில் உள்ள Brookhaven National Laboratory ஆராய்ச்சியாளர்கள் வெளிப்படுத்தியுள்ளனர்.

24
விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

ஆனால், இதை நாம் பார்க்கும் சாதாரண கடல் போல அல்ல. இந்த நீர் திரவமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் இல்லை. மாறாக, ‘ரிங்வுடைட்’ (ringwoodite) என்ற உயர் அழுத்த கனிமத்தின் உள்ளே வேதியியல் முறையில் கட்டுப்பட்ட நிலையில் உள்ளது. உலகின் அனைத்து கடல்களையும் சேர்த்த அளவுக்கு மேலான நீர் இதில் இருக்கக்கூடும் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். அதனால் தான் இதை ‘மறைந்த கடல்’ என்று அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

34
பூமிக்குள் மறைந்திருக்கும் பிரம்மாண்ட கடல்

இந்த கண்டுபிடிப்பு, பூமியில் தண்ணீர் எப்படி கிடைத்தது என்ற பழைய கருத்துக்கள் மாறுகின்றன. இதுவரை, வால்நட்சத்திரங்கள் போன்ற விண்வெளிப் பொருட்கள் மூலம் தண்ணீர் பூமிக்கு வந்ததாக நம்பப்பட்டது. ஆனால் இப்போது, ​​பூமியின் உள்ளேயே நீர் ஆரம்ப காலத்திலேயே இருந்திருக்கலாம் என்ற புதிய கோட்பாடு வலுவடைந்துள்ளது. மேலும், எரிமலை வெடிப்புகள் மூலம் இந்த நீர் மெதுவான மேற்பரப்புக்கு வந்து கடல்களை தாக்கியிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

44
ரிங்வுடைட் கனிமத்தில் சிக்கிய நீர்

இந்த அளவுக்கு ஆழத்தில் நேரடியாக ஆய்வு செய்வது இன்றைய தொழில்நுட்பத்தால் சாத்தியமில்லை. அதனால், விஞ்ஞானிகள் நிலநடுக்க அலைகளின் வேகத்தை ஆய்வு செய்து இந்த உண்மையை கண்டுபிடித்துள்ளனர். நீர் உள்ள பகுதிகளில் அலைகள் மெதுவாகப் பயணிக்கும் காரணத்தால், பூமியின் மேன்டில் பகுதியில் இந்த பெரிய நீர் சேமிப்பு இருப்பதை அவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

Read more Photos on
click me!

Recommended Stories