பஹல்காம் தாக்குதல் தொடர்பாக நடுநிலையான விசாரணைக்கு தயார் என்று பாகிஸ்தான் அறிவித்துள்ளது. இந்த தாக்குதலின் பின்னால் பாகிஸ்தான் இருக்கலாம் என இந்தியா சந்தேகம் அடைந்து வருவது குறிப்பிடத்தக்கது.
Pakistan ready for impartial probe into Pahalgam attack: ஜம்மு காஷ்மீரின் பஹல்ஹாமில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 அப்பாவி மக்கள் உயிரிழந்தனர். பயங்கரவாதிகளின் இந்த கோழைத்தனமாக தாக்குதலால் நாடு முழுவதும் மக்கள் சோகத்துடன், கோபத்துடன் உள்ளனர்.பயங்கரவாதிகள் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் அவர்களை பிடித்து கற்பனை செய்து பார்க்க முடியாத அளவுக்கு தண்டிப்போம் என்று பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார்.
24
Pakistan Prime Minister Shehbaz Sharif
பாகிஸ்தான் தொடர்ந்து பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்து வரும் நிலையில், பஹல்ஹாம் சம்பவத்தை தொடர்ந்து அந்த நாட்டுக்கு எதிராக இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை செய்தது, பாகிஸ்தானியர்களுக்கான விசாவை முழுமையாக ரத்து செய்தது. மேலும் அட்டாரி வாகா எல்லையையும் மூடியுள்ளது. இதற்கு எதிர்வினையாக பாகிஸ்தானும் இந்தியா மீது பல்வேறு நடவடிக்கையை எடுத்தது. சிம்லா ஒப்பந்தத்தை ரத்து செய்தது. தங்கள் வான் எல்லையில் இந்தியா விமானங்களுக்கு தடை விதித்தது. இந்தியா சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை ரத்து செய்தது போர் செயலுக்கு வழி வகுக்கும் என்றும் கூறியது.
இதற்கிடையே பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் குவாஜா ஆசிஃப், "அமெரிக்கா மற்றும் பிரிட்டன் உட்பட மேற்கத்திய நாடுகளுக்காக சுமார் 3 தசாப்தங்களாக (30 ஆண்டுகள்) நாங்கள் பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி அளித்து வருகிறோம். ஆதாவு கொடுத்து வருகிறோம். இந்த மோசமான வேலையை நாங்கள் செய்து வருகிறோம். அது ஒரு தவறு. அதற்காக நாங்கள் பாதிக்கப்பட்டுள்ளோம்'' என்று வெளிப்படையாகவே கூறியுள்ளார். ஆனாலும் பாகிஸ்தான் அரசு இந்தியாவின் பயங்கரவாத தாக்குதல்களுக்கு பின்னால் நாங்கள் இல்லை என தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருகிறது.
44
Jammu and Kashmir, India
இந்நிலையில், பஹல்காம் சமபவம் தொடர்பாக நடுநிலை விசாரணைக்கு பாகிஸ்தான் தயார் என்று அந்நாட்டின் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார். கைபர்-பக்துன்க்வாவின் காகுலில் உள்ள பாகிஸ்தான் ராணுவ அகாடமியில் நடந்த பட்டமளிப்பு விழாவில் உரையாற்றிய பிரதமர் ஷெரீப், "நம்பகமான" விசாரணையில் பங்கேற்க தனது நாடு தயாராக இருப்பதாக கூறியுள்ளார்.
''சமீபத்தில் பஹல்காமில் நடந்த சோகம், இந்த தொடர்ச்சியான பழி சுமத்தும் விளையாட்டிற்கு மற்றொரு எடுத்துக்காட்டு, இது ஒரு முடிவுக்கு வர வேண்டும். பொறுப்பான நாடாக தனது பங்கைத் தொடர்ந்து, பாகிஸ்தான் எந்தவொரு நடுநிலையான, வெளிப்படையான மற்றும் நம்பகமான விசாரணையிலும் பங்கேற்கத் தயாராக உள்ளது'' என்று கூறியுள்ளார்.