ஒன்றையொன்று விழுங்கும் விண்மீன் திரள்கள்! பெரிதாக வளரும் NGC 3640 கேலக்ஸி!

Published : Feb 24, 2025, 08:57 PM ISTUpdated : Feb 25, 2025, 12:03 AM IST

NGC 3640 galactic cannibal: விண்மீன் திரள்கள் சிறிய அளவில் உள்ள மற்ற விண்மீன் திரள்களை விழுங்கி பெரிதாக வளரக்கூடியவை என விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். NGC 3640 கேலக்ஸி குறித்த ஆய்வில் ஐரோப்பிய ஆய்வகத்தின் மிகப் பெரிய தொலைநோக்கி (VLT) மூலம் எடுக்கப்பட்ட சமீபத்திய படங்கள் இதனை உறுதிசெய்கின்றன.

PREV
15
ஒன்றையொன்று விழுங்கும் விண்மீன் திரள்கள்! பெரிதாக வளரும் NGC 3640 கேலக்ஸி!
NGC 3640 Galaxy

NGC 3640 விண்மீன் திரள் சிறிய விண்மீன் திரள்களை உள்ளிழுத்து பெரிதாக வளர்ந்துள்ளது என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். ஐரோப்பிய தெற்கு ஆய்வகத்தின் VLT தொலைநோக்கியில் எடுக்கப்பட்ட சமீபத்திய படங்கள் NGC 3640 அதன் அடுத்த பலியாக NGC 3641 ஐ

25
NGC 3640 Galaxy

இந்த நீள்வட்ட வடிவில் உள்ள NGC 3640 விண்மீன் திரள் பில்லியன் கணக்கான ஆண்டுகளாக தனது அருகில் உள்ள சிறிய விண்மீன் திரள்களை மெதுவாக விழுங்குகிறது. கடந்த காலங்களில் NGC 3640 ஆல் உட்செரிக்கப்பட்ட விண்மீன் திரள்கள் காரணமாக அதன் வடிவம் சிதைந்து, ஓவல் போன்ற அமைப்பை அடைந்துள்ளது.

35
NGC 3640 Galaxy

NGC 3640 இல் உள்ள பழைய நட்சத்திரங்கள் ஏற்கெனவே விண்மீன் திரள்களுடன் மோதிய வடுக்களாக உள்ளன. இது NGC 3640 மற்ற விண்மீன் திரள்களை உறிஞ்சியுள்ளது என்பதை நிரூபிக்கிறது.

45
NGC 3640 Galaxy

NGC 3641 இப்போதைக்கு எந்தத் தொந்தரவும் இல்லாமல் இருந்தாலும், அது உள்ளே இழுக்கப்பட்டு விழுங்கப்படுவதற்கு இன்னும் சிறிது நேரமே ஆகும். ஆனால், NGC 3640 மட்டுமின்றி, நமது பூமி இருக்கும் பால்வீதி உள்பட பெரும்பாலான பெரிய விண்மீன் திரள்கள் சிறிய விண்மீன் திரள்களை உட்கொண்டுள்ளன.

55
Andromeda Galaxy

விண்மீன் திரள்கள் மோதும்போது, ​​அவற்றின் கட்டமைப்புகள் பிளவுபடுகின்றன, அதன் விளைவாக புதிய நட்சத்திரங்களும் கோள்களும் பிறக்கின்றன. பூமி இருக்கும் பால்வீதி இறுதியில் சுமார் 4.5 பில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள ஆண்ட்ரோமெடாவுடன் இணைகிறது. இது NGC 3640 இன் செயல்முறையைப் போலவே இருக்கும்.

click me!

Recommended Stories