இந்தியாவுக்கு 21 மில்லியன் டாலர் நிதி வழங்கியதா அமெரிக்கா? தவறான தகவலை சொன்ன டிரம்ப்! உண்மை இதுதான்!

Published : Feb 21, 2025, 05:20 PM IST

இந்தியாவுக்கு தேர்தல் நிதியாக 21 மில்லியன் டாலர் ஏன் வழங்க வேண்டும்? டிரம்ப் கூறியிருந்த நிலையில், அவர் கூறியது தவறான தகவல் என்பது இப்போது தெரியவந்துள்ளது.

PREV
14
இந்தியாவுக்கு 21 மில்லியன் டாலர் நிதி வழங்கியதா அமெரிக்கா? தவறான தகவலை சொன்ன டிரம்ப்! உண்மை இதுதான்!
இந்தியாவுக்கு 21 மில்லியன் டாலர் நிதி வழங்கியதா அமெரிக்கா? தவறான தகவலை சொன்ன டிரம்ப்! உண்மை இதுதான்!

அமெரிக்காவின் புதிய அதிபர் டொனால்ட் டிரம்ப் பதவியேற்றது முதல் பல்வேறு அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறார். குறிப்பாக அமெரிக்க அரசின் தேவையற்ற செலவினங்கள் குறைக்கப்பட்டு வருகிறது. டிரம்ப் பதவியேற்ற பிறகு 'அரசு செயல் திறன்' (டிஓடிஜி )என்ற புதிய துறை உருவாக்கப்பட்டு அதன் தலைவராக தொழில் அதிபர் எலன் மஸ்க் நியமிக்கப்பட்டார். 

அமெரிக்க அரசின் செலவினங்களை குறைத்து வரும் டிஓடிஜி, இதன் ஒரு பகுதியாக இந்தியா, வங்கதேசம், உக்ரைன், இஸ்ரேல் உள்பட பல்வேறு நாடுகளுக்கு வழங்கப்பட்ட நிதியுதவி ரத்து செய்யப்படுவதாக அறிவித்தது. இந்தியாவில் வாக்கு சதவீதத்தை அதிகரிக்க அமெரிக்க அரசு சார்பில் ஒதுக்கப்பட்ட ரூ.182 கோடி நிதியுதவி ரத்து செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியாகி இருந்தது. 

24
இந்தியாவுக்கு 21 மில்லியன் டாலர் நிதி வழங்கியதா அமெரிக்கா?

மேலும் இது குறித்து பேசிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ''இந்தியாவில் வாக்காளர் வாக்குப்பதிவுக்காக நாம் ஏன் 21 மில்லியன் டாலர்கள் (ரூ.182 கோடி) செலவிட வேண்டும்? அவர்கள் (ஜோ பைடன்) இந்தியாவில் வேறு யாரையாவது தேர்ந்தெடுக்க முயற்சி செய்தார்கள் என்று நினைக்கிறேன்'' என்று தெரிவித்து இருந்தார். அதாவது கடந்த 2022ம் ஆண்டு அமெரிக்காவின் முந்தைய ஜோ பைடன் அரசு இந்தியாவில் வாக்குப்பதிவை அதிகரிக்க ரூ.182 கோடி வழங்கி இருந்ததாக டிரம்ப் கூறியிருந்தார்.

டிரம்ப் கூறியதை கையில் எடுத்த பாஜக, ''இந்தியாவில் வாக்கு சதவீதத்தை அதிகரிக்க ரூ.180 கோடி வழங்கியதாக அமெரிக்க அரசு கூறுகிறது. இந்தியாவில் வேறு ஒருவரை தேர்ந்தெடுக்க இந்த நிதி வழங்கப்பட்டது என டிரம்ப் கூறியதால் இந்தியாவில் இந்த நிதியை வாங்கியது யார்? யாரெல்லாம் அமெரிக்காவிடம் இருந்து பணம் வாங்கினார்கள்? என்பது குறித்து மத்திய அரசு தீவிர விசாரணை நடத்த வேண்டும்'' என்று கூறியிருந்தது. 

அமெரிக்க அதிபர் டிரம்பின் மிரட்டலுக்கு அடிபணிந்த உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி?

34
டொனால்ட் டிரம்ப்

இந்த விவகாரம் இந்தியாவில் விஸ்வரூபம் எடுத்த நிலையில், அமெரிக்கா வாக்கு சதவீதத்தை அதிகரிக்க இந்தியாவுக்கு 21 மில்லியன் டாலர்கள் செலவிடவில்லை என்றும் வங்கதேசத்துக்கு தான் வழங்கியது என்றும் தகவல் சரிபார்ப்பில் தெரியவந்துள்ளது. அதாவது டொனால்ட் டிரம்ப் வங்கதேசத்துக்கு ஏன் தேர்தல் நிதி வழங்க வேண்டும்? என்று கூறுவதற்கு பதிலாக இந்தியாவுக்கு ஏன் நிதி வழங்க வேண்டும்? என தவறாக கூறியுள்ளது தெரியவந்துள்ளது. அவர் வங்கதேசம் என்று கூறுவதற்கு பதிலாக இந்தியா என தவறாக கூறியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அதாவது கடந்த 2022ம் ஆண்டு வங்கதேசத்துக்கு தேர்தல் நிதியுதவியாக அமெரிக்கா 21 மில்லியன் டாலர்கள் வழங்குவதாக தெரிவித்தது. வங்கதேசத்தில் மாணவர்களிடையே அரசியல் மற்றும் தேர்தல் ஈடுபாட்டிற்காக இந்த நிதி வழங்கப்பட்டுள்ளது. வங்கதேச ஷேக் ஹசீனா பதவி நீக்கம் செய்யப்படுவதற்கு ஏழு மாதங்களுக்கு முன்பு 13.4 மில்லியன் டாலர்கள் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. 

44
வங்கதேசத்துக்கு 21 மில்லியன் டாலர் நிதி

அமெரிக்க கூட்டாட்சி செலவினங்களின் அதிகாரப்பூர்வ தரவுகளின்படி கடந்த 2008 முதல் இந்தியாவுக்கு அமெரிக்கா தேர்தல் நிதியுதவி ஏதும் வழங்கவில்லை என்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 2022ம் ஆண்டு USAID இன் நாகோரிக் (குடிமகன்) திட்டம் என்ற பெயரில் வங்கதேசத்துக்கு அமெரிக்கா நிதியுதவி அளிப்பதாக தெரிவித்தது. இந்த நிதியுதவியின் கீழ்தான் ஏற்கனவே $13.4 மில்லியன் செலவிட்டுள்ளதாக பதிவுகள் காட்டுகின்றன.

150% வரி விதிப்பு மிரட்டல்! பிரிக்ஸ் நாடுகள் பிரிந்துவிட்டதாக ட்ரம்ப் கருத்து!

Read more Photos on
click me!

Recommended Stories