கிளைமேட் சேஞ்ச் விளைவு! உலகத்தையே திரும்பிப் பார்க்க வைத்த மவுண்ட் பிஜி!

மவுண்ட் பிஜி என்பது ஜப்பானின் சின்னமாக விளங்கும் எரிமலை சிகரமாகும். குளிர்காலத்தில் பனிமூட்டத்துடன் காணப்படும் பிஜி மலைச்சிகரம் இந்த ஆண்டு பனியே இல்லாமல் இருந்தது உலகின் கவனத்தை ஈர்த்தது.

Mount Fuji in Japan remained snowless, setting a record dating back to 1894 sgb
Mount Fuji

மவுண்ட் பிஜி என்பது ஜப்பானின் சின்னமாக விளங்கும் எரிமலை சிகரமாகும். இது 3,776 மீட்டர் உயரம் கொண்டது. யுனெஸ்கோ நிறுவனம் இதனை உலக பாரம்பரிய தளமாக அறிவித்துள்ளது. 1894ஆம் ஆண்டுக்குப் பிறகு கடந்த அக்டோபர் மாத பிற்பகுதியில், பிஜி மலைச்சிகரம் பனியே இல்லாமல் இருந்தது உலகின் கவனத்தை ஈர்த்தது.

Mount Fuji in Japan remained snowless, setting a record dating back to 1894 sgb
Mount Fuji

கடந்த ஆண்டு, அக்டோபர் 5 ஆம் தேதி பனி மூட்டம் உருவானது. இதற்கு முன்பு 1955 மற்றும் 2016ஆம் ஆண்டு அக்டோபர் 26ஆம் தேதி பனிமூட்டம் உருவாகி இருந்தது. ஆனால் இந்த ஆண்டு நவம்பர் மாதமே வந்துவிட்ட நிலையில், பிஜி மலைச்சிகரத்தில் இன்னும் பனிப்பொழிவு இல்லை. 1894ஆம் ஆண்டு தான் பிஜி மலையில் அதிக வெப்பநிலை காரணமாக பருவகாலம் தொடங்குவதில் தடை ஏற்பட்டது என அந்நாட்டு கோஃபு வானிலை மையம் சொல்கிறது.

Tap to resize


Mount Fuji

இரண்டாம் ஆண்டாக, 2024ஆம் ஆண்டில் ஜப்பான் அதன் வெப்பமான கோடையை அனுபவித்தது. ஜூன் மற்றும் ஆகஸ்ட் இடையே வெப்பநிலை சராசரியை விட 1.76 ° C ஐ எட்டியது. இது போன்ற தொடர்ச்சியான அதிக வெப்பநிலையே மவுண்ட் பிஜியில் பனிப்பொழிவு தாமதத்திற்கு காரணம் என்று கூறப்படுகிறது. மேலும், சுமார் 74 ஜப்பானிய நகரங்கள் கடந்த அக்டோபர் மாத தொடக்கத்தில் 84°F க்கு மேல் வெப்பநிலையை பதிவு செய்துள்ளன.

Mount Fuji

பிஜி மலையில் பனிப்பொழிவு இல்லாதது உலகளாவிய போக்கை ஒத்திருக்கிறது. உலகெங்கிலும் குளிர்காலம் வழக்கத்தைவிட வெப்பமாக இருக்கிறது. கடந்த 40 ஆண்டுகளாக பூமியின் வடக்கு அரைக்கோளத்தின் பெரும்பாலான பகுதிகளில் பனிப்பொழிவு குறைந்து வருகிறது. இதற்கு மனிதனால் தூண்டப்பட்ட புவி வெப்பமயமாதல் முதன்மைக் காரணம் என ஜனவரியில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வு கண்டறிந்துள்ளது. பசுமை இல்ல வாயுக்களின் உமிழ்வு இந்த வேகத்தில் தொடர்ந்தால், உலகின் பெரும்பகுதியில் 2100ஆம் ஆண்டில் பனியே இல்லாத குளிர்காலம்தான் நிலவும் என வளிமண்டல விஞ்ஞானி ஆண்ட்ரூ ஸ்வார்ட்ஸ் கணித்துள்ளார்.

Mount Fuji

பிஜி மலைச்சிகரத்தில் காலநிலை மாற்றத்தின் விளைவுகள் இருந்தாலும், வேறு குறிப்பிடத்தக்க பிரச்சனைகளும் உள்ளன. அதில் முதன்மையானது அதிகப்படியான சுற்றுலா. ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான ஹைகிங் பருவத்தில் 220,000 க்கும் அதிகமானவர்கள் வருகின்றனர். குப்பை கொட்டுதல், கட்டுப்பாட்டை மீறிய கியர் பயன்பாடு ஆகியவை குறித்து ஜப்பானிய அதிகாரிகள் புகார் கூறுகின்றனர். கடந்ந்த ஜூலை மாதம் முதல் பிஜியில் மாசுபாட்டைக் கட்டுப்படுத்த, சுற்றுலா வரி அமல்படுத்தப்பட்டது.

Mount Fuji

ஜப்பானின் புகழ்பெற்ற மவுண்ட் ஃபிஜி உள்பட பல இடங்களில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பனிப்பொழிவு தாமதப்படுகிறது. இது புவி வெப்பமயமால் மற்றும் மனித நடவடிக்கைகளால் தூண்டப்பட்ட சுற்றுச்சூழல் பாதிப்புகளின் விளைவு என்று விஞ்ஞானிகள் கருதுகிறார்கள்.

Latest Videos

click me!